கமலின் ஒற்றை வார்த்தையில் மொத்த படமும் முடிந்தது.. கண்ணீருடன் தயாரிப்பாளர் சொன்ன சேதி

பல்வேறு நட்சத்திரங்கள் பற்றி பட்டென சொல்லி விடுபவர் தயாரிப்பாளர் முரளிதரன். கமல் ரஜினி உட்பட பல்வேறு உச்ச நட்சத்திரங்களுக்கு தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர் தான் இந்த முரளிதரன்.

இப்படியாக உலக நாயகனை பற்றி பேச ஆரம்பிக்கவே சட்டென அவருக்கு தோன்றியது அன்பே சிவம் படத்தின் அனுபவங்கள். பேச ஆரம்பித்தவர் உடனே கண்ணீர் மல்க நடந்த கதைகளை உடைத்தார்.

அன்பே சிவம் படம் நல்ல முறையில் எடுக்கப்பட்டு நல்ல முறையில் வெறியீடு செய்யப்பட்டது என்றும், வெளியீடு செய்யும் வரை கமல் எந்த ஊதியமும் வாங்கவில்லையாம் பிறகு கலெக்சனை பார்த்துவிட்டு 50%க்கும் குறைவான சம்பளத்தையே கடைசியில் வாங்கியிருந்தாராம்.

கடைசியாக அவர் கூறிய ஒற்றை வார்த்தை கலெக்சன் வந்தால் கொடுங்கள் இல்லையேல் பிரச்சினை இல்லை என்றும் கூறினாராம் கமலஹாசன்.

இது மட்டுமல்ல தமிழகமெங்கும் அவரவர்க்கு ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்த நட்சத்திரங்கள் மத்தியில் நற்பணி மன்றம் என்கிற பெயரில் தன் ரசிகர்களால் முடிந்த உதவியை தமிழ்நாடு முழுக்க செய்து வந்தவர் அவர்தான் என்றும் கூறியிருந்தார்.

anbe-sivam
anbe-sivam

இப்படி ஒரு உதவியை தன் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன் மறக்கவும் முடியாது என்றும்கூறினார்.

உலக நாயகன் உலக நாயகன் தான்

- Advertisement -