ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சரியாக திட்டம் போட்டு காய் நகர்த்தும் கமல்.. அவருக்கு மட்டுமே தெரிந்த ராஜதந்திரம்

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை காட்டுவார். பல புதுமையான விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் அவர் அதை மக்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பதிலும் வல்லவர்.

அந்தந்த காலகட்டத்தில் எந்த நடிகர்கள் மக்களிடம் மிகவும் பிரபலமாக இருக்கிறார்கள், யாரை எப்படி கையாண்டால் என்ன ரிசல்ட் கிடைக்கும் என்றெல்லாம் கணக்கு போட்டு தான் அவர் படத்தை எடுப்பார். அதுதான் அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறது.

தன்னுடைய படங்களில் புதுப்புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்துவதில் இருந்து தமிழ் சினிமா கண்டிராதா பல புதுமைகளையும் அவர் பயன்படுத்துவார். சில விஷயங்களை முன்கூட்டியே கணிக்க கூடிய தீர்க்கதரிசியாகவும் அவர் இருக்கிறார். அந்த அளவுக்கு அவருடைய அறிவு கூர்மையும், அனுபவமும் பலரையும் வியக்க வைக்கிறது.

இப்படித்தான் அவர் தன்னுடைய படத்தின் வெற்றியை உருவாக்குகிறார். உதாரணமாக தற்போது வெளியான விக்ரம் திரைப்படத்தில் கூட பகத் பாசில், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் போன்றவர்களை அவர் தேர்ந்தெடுத்ததன் காரணமும் அதுதான்.

ஏனென்றால் அவர்களுக்கு தான் இப்போது மக்கள் மத்தியில் அதிக பிரபலம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களை வைத்து காய் நகத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று திட்டம் போட்டு தான் அவர் விக்ரம் படத்தையே எடுத்தார். அவரின் அந்த கணிப்பு சற்றும் பொய்யாகாமல் இப்படி ஒரு மெகா வெற்றி அவருக்கு கிடைத்துள்ளது.

இதற்கு முன்னர் வெளியான தசாவதாரம் திரைப்படத்தில் கூட அவர் பல மாறுபட்ட கெட்டப்புகளை போட்டு நடித்திருப்பார். அதில் காட்டியிருந்த வித்தியாசமும், படத்தின் தரமும் தான் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

ஆரம்பகாலத்தில் இருந்தே அவர் இதுபோன்று சாதுரியமாக ஒவ்வொரு விஷயத்தையும் கணித்து செயல்படுத்தி வருகிறார். இப்படி அவர் சினிமாவில் நகர்த்தும் ஒவ்வொரு விஷயமும் புதிதாக இருப்பதால்தான் அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது.

- Advertisement -

Trending News