கமலோட கணிப்பு சாதாரணமானது அல்ல.. காமெடி நடிகையை பார்த்து மிரண்டு போன பாலுமகேந்திரா

இயக்குனர் பாலு மகேந்திரா என்றாலே கண்டிப்பானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் படத்திற்கு கதையோடு கதாபாத்திரத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். தனக்கு தவறாகப்பட்டால் உடனே அதை பளிச்சென்று வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர். இவரின் கணிப்பை மீறி கமல் செய்த காரியம் இவரை மிரள வைத்துள்ளது.

இவரின் இயக்கத்தில் 1995ல் கமல் நடிப்பில் வெளிவந்த படம் தான் சதிலீலாவதி. இதில் அன்றைய காலகட்டத்தில் நகைச்சுவை நாயகியாக வலம் வந்த கோவை சரளாவை ஹீரோயின் ஆக இடம்பெற்று இருப்பார். ஆனால் இப்படத்தை இயக்கிய பாலுமகேந்திராவுக்கு கோவை சரளா இப்படத்தில் நடிக்க வைப்பதில் விருப்பம் இல்லையாம்.

Also Read: மணிரத்தினத்தின் 4 செல்லப்பிள்ளைகள்.. 75% படத்தில் வந்து செல்லும் ஒரே கதாபாத்திரம்

இந்நிலையில் கமல் ஒரு நகைச்சுவை நடிகையான சரளாவை தன் ஜோடியாக ஏற்று நடித்திருப்பார். இது நல்ல விமர்சனத்தை பெற்று தந்தாலும். இத்தகைய செயலை கண்டு இயக்குனருக்கு படப்பிடிப்பில் ஈடுபாடு இல்லாமல் இருந்துள்ளார். அதற்கு கமல் ஏன் இவ்வாறு இருக்கிறீர்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கூறி விடுங்கள் எனவும் கேட்டாராம்.

அதன்பின் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பிற்கு பிறகு, கோவை சரளாவின் நடிப்பை கண்டு நல்ல அபிப்ராயம் கொண்டார் பாலு மகேந்திரா. மேலும் இவரின் கொங்கு பாஷையால் அசந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து ஒரே டேக்கில் இவர் பேசி அசத்திய வசனத்தை கேட்டு மிரண்டும் போனாராம்.

Also Read: இயக்குனர் என்பதை மறந்து நடிப்பில் இறங்கிய 5 பிரபலங்கள்.. வில்லனாய் மாறிய கௌதம் மேனன்

இவ்வாறு தன்னை நிரூபிக்கும் சூழ்நிலையில் இருந்த கோவை சரளாவிற்கு இப்படம் ஒரு பரீட்சையாக இருந்தது என்றே கூறலாம். ஒரு நகைச்சுவை நடிகையாக இருந்த இவரை நம்பி இப்படி ஒரு ஹீரோயின் வாய்ப்பை கொடுத்த கமலை பெருமைப்படுத்தும் விதமாக இப்படத்தை நடித்துக் கொடுத்தாராம் கோவை சரளா.

இத்தகைய சம்பவம் பாலுமகேந்திராவின் கணிப்பை முறியடிக்கும் விதமாக இருந்துள்ளது. அதன்பின் இயக்குனர் கமலிடம் உன்னுடைய கணிப்பு சாதாரணமானதல்ல என பெருமிதம் பட பேசினாராம். இத்தகைய நிகழ்வு கமல் சினிமாவில் கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக இருந்து வருகிறது.

Also Read: சிறுத்தை போல வேட்டையாட காத்திருக்கும் கமல்.. மலையாள நடிகர் உட்பட 5 பேருக்கு வலை வீசும் உலகநாயகன்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை