தளபதி விஜய்க்கு தான் அந்த கொடுப்பினை இல்ல.. பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யும் ஆண்டவர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர்.

தற்போது இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கும் கமல் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். கமலின் நடிப்பில் திரைப்படம் வெளிவந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதன் காரணமாகவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஆர்வம் இருந்து வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரெய்லர் தொடர்பான செய்திகள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது. சமீபத்தில் படக்குழு விக்ரம் படத்தின் டிரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட இருப்பதாக அறிவித்தனர்.

இந்த செய்தியை பலரும் ஆச்சரியமாக பார்த்து வந்த நிலையில் தற்போது படம் குறித்த மற்றொரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளிவரும் படங்களுக்கு பெரிதாக ஆடியோ லான்ச் பங்க்ஷன் எதுவும் நடப்பதில்லை.

அந்த வகையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பீஸ்ட் திரைப்படத்திற்கு கூட ஆடியோ லான்ஞ்ச் வைக்கவில்லை. இது தளபதியின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய குறையாக இருந்தது. ஆனால் கமல் அப்படி ஒரு குறையை தன் ரசிகர்களுக்கு வைக்காமல் இந்த விக்ரம் படத்தின் ஆடியோ லான்சை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

அதற்காக கமல் முதல்வர் ஸ்டாலின் வரை சென்று சம்மதம் வாங்கி இருக்கிறார். வரும் மே மாதம் 15 முதல் 20 தேதிக்குள் இந்த படத்தின் ஆடியோ லான்ச் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வு மிகவும் பிரம்மாண்டமாக ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்கான வேலைகள் அனைத்தையும் தற்போது கமல் முழுவீச்சில் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் உட்பட சில அரசியல் பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் சாண்டி மாஸ்டரின் நடன நிகழ்ச்சி உட்பட நாம் எதிர்பார்க்காத பல ஆச்சரியங்களும் அந்நிகழ்வில் காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கமல் வழக்கம் போல இந்தப் படத்தின் பிரமோஷனில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டார் என்று சொல்லலாம். தற்போது இந்த செய்தி தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.