திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பொங்கலோ பொங்கல்னு வேட்டு வைத்த கமல்.. உப்பு சப்பில்லாத ஆண்டவரின் பிறந்தநாள்

38 வருடங்களுக்கு பிறகு கமல் மற்றும் மணிரத்தினம் இணைந்த படம் தக்லைப். இந்தப் படம் ஆரம்பிக்கும் போதே 2024ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸ் என்றெல்லாம் கூறப்பட்டது. அதன் பின் 2025 பொங்கல் ரிலீஸ் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் இப்பொழுது எல்லாத்துக்கும் வேட்டு வைத்து விட்டனர்.

2025 பொங்கல் ரிலீஸ் பண்ணி விடலாம் என்று தான் மணிரத்தினம் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வந்தார். இதற்காக இரவும் பகலுமாய் சிம்பு, கமல் இருவரும் நடித்து வந்தனர். எதற்குமே அசராத சிம்பு இந்த படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார்.

உப்பு சப்பில்லாத ஆண்டவரின் பிறந்தநாள்

நவம்பர் 7 கமலின் பிறந்தநாள் அந்த தேதியில் இந்த படத்தின் டீசரை வெளியிடலாம் என மணிரத்தினம் எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் படத்தின் வேலைகள் இன்னும் முடிந்த பாடில்லை. இந்த படம் இப்பொழுது பொங்கலுக்கு ரிலீசாகாது என்று தெரிகிறது. அதனால் கமலின் பிறந்தநாள் டீசர் உப்பு சப்பற்ற பிறந்த நாளாக மாறிவிட்டது.

இந்த படம் இப்பொழுது 2025 தமிழ் புத்தாண்டுக்கு தான் வெளிவிடுவதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் பத்தாம் தேதி இந்த படத்தை வெளியிட்டால் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வசூலை வாரி விடலாம் என எண்ணுகிறார்கள். எப்பொழுதுமே மணிரத்தினம் சொன்ன தேதியில் ஷூட்டிங் முடித்து ரிலீஸ் செய்து விடுவார்.

தக்லைப் பட சூட்டிங் மணிரத்தினம் யோசித்து வைத்தது போல் இல்லையாம் ஒவ்வொரு நாளும் புது புது பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். கமல் ஒரு பக்கம் ஏஐ டெக்னாலஜி பயன்படுத்தி காட்சிகளை மெருகேற்றலாம் என யோசனை கூறி வருகிறாராம். அதனால்தான் இந்த படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியவில்லையாம்.

- Advertisement -

Trending News