முதல் நாளே ஆண்டவர், விஜய் சேதுபதி.. அனல் பறக்கும் விக்ரம் சூட்டிங்க் ஸ்பார்ட் புகைப்படம்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் 232வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு விக்ரம் என பெயரிட்டுள்ளனர். இது ஏற்கனவே கமல் நடிப்பில் வெளியான தோல்வி படத்தின் டைட்டில் தான்.

முன்னதாக விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி செம வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் கமல்ஹாசன் எலக்சனில் பிசியாக இருந்ததால் திட்டமிட்டபடி படப்பிடிப்புகள் தொடங்க முடியவில்லை.

தற்போது அனைத்தும் முடிந்ததால் மீண்டும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் கமலஹாசன். அந்த வகையில் விக்ரம் படம் உருவாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் படங்களில் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட நபர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள். ஆனால் விக்ரம் படத்தில் அவர் எதிர்பார்த்த பணியாளர்கள் பலரும் விலகி புதிய புதிய பணியாளர்களுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் விருப்பமான கேமராமேன் சத்யன் சூரியன் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில்தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவான சர்கார் படத்தில் கேமராமேனாக பணியாற்றிய கிரிஷ் கங்காதரன் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஒரு வழியாக விக்ரம் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆண்டவர் சம்பவம் கன்ஃபார்ம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து முதல் நாளே விஜய் சேதுபதி மற்றும் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவன அலுவலகத்தில் தொடங்கிவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

vikram-shooting-spot
vikram-shooting-spot
- Advertisement -