நட்பை கூட பார்க்காமல் ரஜினிக்கு, கமல் கொடுக்கும் நெருக்கடி..லோகேஷை வைத்து போடும் ஆடு புலி ஆட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாத ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. படத்தின் போஸ்டர் மற்றும் கிலிம்ஸ் வீடியோக்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளப்பி இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க இயக்குனர் நெல்சனின் படமாக இருக்கும், கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த், நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தற்போது மிகப்பெரிய கனவாக இருப்பது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பது தான். அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது.

Also Read:ஓவர் கெடுபிடி காட்டும் கமல்.. மணிரத்தினமே இருந்தாலும் உலகநாயகன் கொடுக்கும் டார்ச்சர்

லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து மிகப்பெரிய வெற்றி அடைந்த விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு ரஜினிக்கு, லோகேஷ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசையாக மாறிவிட்டது. ஆனால் இயக்குனர் லோகேஷ் தான் இறுதிவரை அதற்கு பிடி கொடுக்காமல் இருந்தவர். தற்போது பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு தலையசைத்து இருக்கிறார்.

ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவதற்கு மிகப்பெரிய சிக்கலாக இருந்தது உலகநாயகன் கமலஹாசன் தான். விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ், கமலுடன் அடுத்த படத்தில் பணி புரிய ஒப்பந்தமாகி இருந்தார். இடையில் கிடைத்த பிரேக்கில் தான் தற்போது நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஒப்பந்தப்படி லியோ முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் கமலஹாசனின் படத்தில் இணைய வேண்டும்.

Also Read:பல கோடிகளுக்கு மயங்கிய உலகநாயகன்.. முதன்முதலாக மற்ற ஹீரோக்களுக்காக எடுக்க போகும் அவதாரம்

ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு அப்படியே சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். இந்த காரணத்தால் உலக நாயகன் கமலஹாசன், லோகேஷ் கனகராஜ் ரஜினிக்கு அடுத்த படம் பண்ணுவதற்கு விட்டுக் கொடுத்திருக்கிறார். நடிப்பில் விட்டுக் கொடுத்தாலும், மற்றொரு விஷயத்தில் லோகேஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு கிடுக்கு பிடி போட்டு வைத்து விட்டார் உலக நாயகன்.

அதாவது ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகத்தான் முதலில் பேசப்பட்டது. ஆனால் தற்போது கமலஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தன்னுடைய விருப்பத்தை ரஜினிகாந்திடம் தெரிவித்திருக்கிறார். கமல் தனக்காக லோகேஷின் படத்தை விட்டுக் கொடுத்து இருப்பதால் வேறு வழி இன்றி இந்த படத்தை கமல் தயாரிப்பதற்கு ரஜினி ஓகே சொல்லி இருக்கிறாராம்.

Also Read:தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.. கமல் செய்த வசூல் சாதனை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்