தீபிகா படுகோனாவால் வாயடைத்துப் போன கமல்.. இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கெதி

கமல் எந்த அளவுக்கு நடிகராக புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதேபோல் தயாரிப்பாளராகவும் சாதிக்க வேண்டும் என்று முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அதற்கு என்னெல்லாம் பண்ணனுமோ அந்த வழிகளை தேடி தேடி போய் தூக்கி விடுகிறார். இப்படித்தான் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்தை எப்படியாவது வளைத்துக் போட வேண்டும் என்று ரொம்பவும் ஆசையில் சுத்திட்டு இருந்தார்.

ஆனால் கடைசியில் அந்த வாய்ப்பு இவரிடம் இருந்து கைநழுவி போய்விட்டது. அடுத்ததாக சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்கள் தொடர்ந்து ஹிட்டானதால் தற்போது வெற்றி நாயகனாக சிம்பு வாகை சூடி இருக்கிறார். அதனால் சிம்புவின் 48வது படத்தை தயாரித்து அதன் மூலம் பெரிய லாபத்தை பார்க்க வேண்டும் என்று சரியான நேரத்தில் முடிவெடுத்து காய் நகர்த்தி வருகிறார்.

Also read: தயாரிப்பாளராக கெத்து காட்டும் கமல்.. 500 கோடி பட்ஜெட், 3 ஹீரோக்களால் அரண்டு போன லைக்கா

அத்துடன் சிம்பு தற்போது அவருடைய சம்பளமாக 25 கோடி வாங்கிக் கொண்டிருக்கிறார். அதே போல ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் எஸ்டிஆர் இன் 48வது படத்திற்கும் அதே சம்பளத்தை கொடுக்க முடிவு செய்து இருக்கிறார். மேலும் அடுத்த கட்டமாக சிம்புக்கு ஜோடியாக முதலில் கீர்த்தி சுரேஷ் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் கமலின் பேராசையால் வேறு ஒரு முடிவுக்கு போய்விட்டார்.

அதாவது கமல் இந்த படத்தை எப்படியாவது ஒரு ஹிட் படமாக ஆக்க வேண்டும் என்பதால் ஹீரோயினை ரொம்பவே ஸ்ட்ராங்காக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வித்தியாசமான முடிவை எடுத்தார். கீர்த்தி சுரேஷ்க்கு பதிலாக பாலிவுட் ஹீரோயினான தீபிகா படுகோனாவை களம் இறக்க முடிவு செய்தார். அதேபோல் கமல் கேட்டபடி அவரும் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் அவர் ஒரு டிமாண்ட் கமலுக்கு கொடுத்தார்.

Also read: இந்தியன் 2 ஃபர்ஸ்ட் காப்பி பார்த்த கமல் என்ன சொன்னார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஷங்கர்

இதை கேட்டதும் வாயடைத்து போய்விட்டார் கமல். அதாவது தீபிகா படுகோன் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு 30 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் 5 ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவேன். அத்துடன் அந்த தளத்தில் இருக்கும் எல்லா ரூம்களையும் எனக்கு புக் பண்ணி விட வேண்டும் என்று தடாலடியாக கண்டிஷன் போட்டிருக்கிறார். மேலும் என்கூட 5 முதல் 6 பேர் வருவார்கள் அவர்களுக்கும் நீங்கள் சம்பளம் கொடுத்து விட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதை கேட்ட கமல் அப்படியே ஜகா வாங்கி விட்டார். ஏனென்றால் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் சிம்புவிற்கே 25 கோடி தான். அப்படி இருக்கையில் இந்த நடிகை அதிகமாக கேட்கிறார் என்று தற்போது பாலிவுட் நடிகையை நடிக்க வைக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டார். இருக்கிறதை விட்டுவிட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கடைசியில் கெதி. இப்பொழுது மறுபடியும் இவர் கீர்த்தி சுரேஷ் இடம் போய் நிற்கும் நிலைமை வந்துவிட்டது.

Also read: சிம்புக்காக ரிஸ்க் எடுக்கும் கமல்.. பாலிவுட்டிலிருந்து இறக்குமதியாகும் ஹீரோயின்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்