கமல் கூட்டணியில் இணையும் சிம்பு.. சினிமாவைத் தாண்டி எகுற போகும் மார்க்கெட்

லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூலை எட்டி உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு கமலஹாசனின் மார்க்கெட் வேற ரேஞ்சுக்கு இருக்கும் என்பதால் அடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் சின்னத்திரை ரசிகர்களின் பிடித்தமான என்டர்டைன்மென்ட் ஷோவாக இருக்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன் களை வெற்றிகரமாக முடித்துவிட்டு தற்போது ஆறாவது சீசனை வரும் அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த ஐந்து சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இதைத்தொடர்ந்து விக்ரம் படத்தின் மூலம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது முயற்சியாக ஓடிடி தளத்தில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்காமல் அவருக்கு பதில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தொகுத்து வழங்கினார்.

அவரும் கமலுக்கு நிகராக அருமையாக நிகழ்ச்சியை நடத்தினார். இப்பொழுது அடுத்த பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ள நிலையில், விக்ரம் வெற்றியில் இருக்கும் கமல் அல்லது சிம்பு யார் தொடர்ந்து நடத்துவார்கள் என்ற நிலையில், இருவரும் சேர்ந்து நடத்தப் போவதாக அறிவிப்பு வந்துள்ளது.

இந்த முடிவை கமல் அவர்களை எடுத்துள்ளார். இவ்வளவு வெற்றி வந்தாலும் கமல் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை விடமாட்டார். காரணம் கடைக்கோடி மக்களிடம் அவரை கொண்டு சேர்த்த நிகழ்ச்சி பிக் பாஸ்.

அடுத்து கமல் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நிறைய இளம் நடிகர்களை வைத்து படம் தயாராக உள்ள நிலையில், அந்த வரிசையில் சிம்புவும் சேர்ந்து இருக்கிறார். இதன் காரணமாக இருவரும் சேர்ந்து பிக்பாஸ் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்