கொளுத்திப் போட்டு வேடிக்கை பார்க்கும் கமல்.. அடித்துக்கொள்ளும் சங்கர் மற்றும் லைகா

இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் தட்டுத் தடுமாறிக் கொண்டே இருப்பதற்கு முக்கியக் காரணமே கமல்தானாம். இது தெரியாமல் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் மாறி மாறி சண்டை போட்டு வருகின்றனர் என கோலிவுட் வட்டாரமே பல்லைக்காட்டி இழிக்கிறது.

இந்தியன் என்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு லைகா தயாரிப்பில் ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் இந்தியன் 2 படம் உருவாகி வந்தது. இந்த படத்தில் கமலுடன் மறைந்த நடிகர் விவேக், பிரியா பவானி சங்கர், சித்தார்த் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.

ஆனால் இடையில் விபத்து நடந்து இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் தடுமாறியது. அதன் பிறகு படப்பிடிப்பு நடத்தலாம் என்று ஆரம்பித்த போது கமல் ஒரு பக்கம் தேர்தல் என கிளம்பிவிட்டார். விபத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் போதே கமல் மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால்தான் அரசியலை காரணம் காட்டி அந்தர் பல்டி அடித்தார் கமல். அங்கிருந்துதான் சனியன் சடை போட ஆரம்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சங்கர் மற்றவர்களை வைத்து படம் எடுக்கலாம் என ஆரம்பித்தபோதுதான் கொரோனா உள்ளே புகுந்து ஒரு ஆட்டம் ஆடியது.

அதோடு சரி. ஒருபக்கம் பட்ஜெட்டை குறைக்க கூறி லைகா நிறுவனம் சங்கரின் கழுத்தை நெறிக்க, இது வேலைக்கு ஆகாது என சங்கர் ஒரு பக்கம் முறைக்க எப்படியோ நம்ம எஸ்கேப் ஆகி விட்டோமே என கமல் பொட்டியை கட்டிக் கொண்டார்.

ஆக மொத்தத்தில் இந்த முழு சண்டைக்கும் காரணமே கமல்தான் எனவும், ஆனால் இது தெரியாமல் இரண்டு தரப்பும் அடித்துக் கொள்கிறார்களே எனவும் கோலிவுட் வட்டாரமே சிரித்துக் கொண்டிருக்கிறது.

indian2-cinemapettai
indian2-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்