இப்பவே தோல்வி பயத்தை காட்டும் கமல்.. பதட்டத்துடன் இருக்கும் லியோ படக்குழு

வாரிசு படத்திற்கு பின் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தின் ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்து பிறகுதான் படப்பிடிப்பை மாஸாக துவங்கி உள்ளனர்.
ஆனால் இப்போதே படத்தின் வசூலை குறித்த படக்குழுவிற்கு பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.

ஏனென்றால் இந்த முறை உலக நாயகன் கமலஹாசன் உடன் விஜய் நேருக்கு நேர் மோதும் நிலை வந்து விடுமோ என்று லியோ படக்குழுவினர் பதறுகின்றனர். முன்பு விஜய் படத்துடன் ஏகே 62 படம் தான் மோதும் என எதிர்பார்த்த நிலையில், இதுவரை அஜித் படம் ஆரம்பிக்க கூட இல்லை.

Also Read: லோகேஷுக்கு வலை விரித்து இருக்கும் 3 ஸ்டார்கள்.. 50 கோடியுடன் காத்திருக்கும் பாலிவுட் நடிகர்

இதனால் களத்தில் விஜய் மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், தற்போது அதற்கும் பிரச்சினை வந்துள்ளது. இந்தியன் 2 தீபாவளிக்கு என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 20 நாட்களுக்கு முன்கூட்டியே லியோ படத்தை வெளியிடுகிறார்கள்.

லியோ மற்றும் இந்தியன் 2 போன்ற இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகுவதற்கான கால இடைவெளி வெறும் 20 நாட்கள் மட்டுமே. இருந்தாலும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகனின் வெறித்தனமான நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் இந்தியன் 2 வெளிவந்தால், 20 நாட்களில் விஜய்யின் லியோ படத்தை தூக்கி சாப்பிட்டு விடும்.

Also Read: ரஜினி, விஜய் வெற்றி பெற்றால் தான் இருக்க முடியும்.. ஆனா கமல் அப்படி இல்லை, சர்ச்சையை கிளப்பிய இயக்குனர்

லியோ படம் நல்லா இருந்தாலும், இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல வருடங்களாக ரசிகர்களிடம் நிலவி வருகிறது. அப்படி இருக்கையில் லியோ படத்தை விட இந்தியன் 2 படத்தை தான் திரையரங்கில் முதலில் வந்து பார்க்க நினைப்பார்கள். இரண்டாவது சாய்ஸ் தான் லியோவாக இருக்கும்.

இதனால் அதிக தியேட்டர்கள் தேவைப்படும் நிலை உருவானால் லியோ படத்தை தூக்கி விடுவார்கள். இதனால் விஜய்க்கு தற்போது புதிய பிரச்சனை தொடங்கியுள்ளது. இதை எப்படி சமாளிப்பது என்று லியோ படக்குழுவினர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியுள்ளனர்.

Also Read: விஜய், அஜித் இல்லாத சிறந்த 10 நடிகர்களின் லிஸ்ட்.. வசூல் பண்ணா மட்டும் பத்தாது, பெர்பார்மன்ஸ் இல்ல

Next Story

- Advertisement -