Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-hasan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல் கொண்டு வந்த ட்ரெண்ட்.. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவெடுக்கும் நம்ம சினிமா

உலகநாயகன் கமலஹாசன் ஜூன் மூன்றாம் தேதி திரைக்கு வந்த விக்ரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை கௌரவப்படுத்தும் அளவிற்கு செய்துவிட்டார் என்பதில் ஆச்சரியமில்லை. ஆங்கில படத்துக்கு இணையான ஒரு படத்தை தனது 67-வது வயதில் கொடுத்து அசத்தி இருக்கிறார்கள் கமல் மற்றும் லோகேஷ் கூட்டணி.

இந்த படத்தில் கமல் தமிழ் சினிமாவிற்கான ஒரு புது ட்ரெண்ட் கொண்டு வந்துவிட்டார். ஆனால் அது பழைய படங்களில் கடைபிடித்தாலும் அதன் பின் ஒவ்வொருவரும் வளர்ந்துவிட்டதால் அவர்களுக்குள் இருக்கும் ஈகோ அப்படி செய்ய விடுவதில்லை. ஆனால் கமல் அதை கையில் எடுத்து செயல்படுத்தி இருக்கிறார்.

இப்பொழுது கமல் தமிழ் சினிமாவில் கொண்டுவந்த இந்த ட்ரெண்ட் ஆங்கிலப் படத்துக்கு இணையான ஒரு விதியாகும். அதாவது பெரிய பெரிய நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடித்து தங்களுடைய திறமையை காட்டி படத்தை மெருகேற்றுவதுதான். இதனால் படத்தில் யார் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்கின்ற ஆரோக்கியமான போட்டி நடிகர்களுக்குள்ளேயே நிலவும்.

இதனால் படம் நினைத்ததை விட சிறப்பாகவே உருவாகும். இதில் ஒன்று மட்டும் தான், பெரிய பெரிய நடிகர்களை ஒரே படத்தில் போட்டால் அதில் அவர்களுக்குள் நட்பு வட்டாரத்தை உருவாக்கி விட்டால் மட்டும் போதும். அப்படி செய்தால் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்படாமல் படம் சிறப்பாக வெளிவரும்.

இதைதான் அப்படியே விக்ரம் படத்தில் கமல் செயல்படுத்தி வெற்றியை ருசித்திருக்கிறார். கமலின் விக்ரம் படத்தில் விஜயசேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், சூர்யா, ஷிவானி நாராயணன், மகேஸ்வரி, மைனா நந்தினி என பல நட்சத்திரங்களை போட்டு அசத்தி இருக்கிறார்.

இனிமேலாவது தமிழ் சினிமாவில் இந்த மாதிரி படங்கள் வருமா என்று ஒரு கேள்விக்குறி எழும்புகிறது. ஆனால் கமலுக்கு முன்பே இதை லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரையும் ஒரே படத்தில் இணைத்து ரசிகர்களை திளைக்கச் செய்தார்.

Continue Reading
To Top