விக்ரம் படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரம் இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்

தற்போது வெளிவர இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களை விட ஒரு படி அதிக எதிர்பார்ப்புள்ள திரைப்படம் என்றால் அது லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்திற்கு தான் என்றால் மிகையாகாது.

அதற்கு காரணம் விக்ரம் படத்தில் கமலஹாசனுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் போன்ற தரமான நடிகர்கள் இணைந்துள்ளது தான். திறமையான நடிகர்கள் 3 பேர் இந்த படத்தில் இணைந்துள்ளதால் விக்ரம் படம் எப்படி இருக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கின்றன.

தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இதையெல்லாம் லோகேஷ் கனகராஜ் எப்படி சமாளித்து மூவருக்கும் இணையான கதாபாத்திரம் கொடுத்து படத்தை எடுக்கப் போகிறார்? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விக்ரம் படத்தில் முதலில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் போலீஸ் என செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது பார்வையற்றவராக கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தான் தெரியவில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே ராஜபார்வை என்ற படத்தில் பார்வையற்றவராக நடித்துள்ளார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் கூட விஜய் கண் பார்வையற்றவராக நடிப்பதாக ஒரு தகவல் வைரலானது குறிப்பிட வேண்டிய ஒன்று.

ஒரு படம் வெளியாவதற்கு முன்னர் அது குறித்து ஆயிரம் வதந்திகள் வருவது சாதாரண ஒன்றுதான். ஆக மொத்தத்தில் தற்போது தமிழ் சினிமாவை அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது விக்ரம்.

kamal-vikram-cinemapettai
kamal-vikram-cinemapettai

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -