புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அஜித் கழட்டிவிட்ட இயக்குனருக்கு தோள் கொடுக்கும் கமல்.. இவரை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படமா.?

சினிமாவை கொஞ்சம் வித்தியாசமாக பார்க்கக்கூடிய உலக நாயகன் கமலஹாசன் சமீப காலமாகவே இளம் இயக்குனர்கள் மற்றும் இளம் நடிகர்களின் படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில் அஜித்தால் கைவிடப்பட்ட இயக்குனருக்கு பெரிய பட்ஜெட் படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

ஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குகிறார் என்று அவருக்கு ஆசை காட்டி மோசம் பண்ணி விட்டனர். இதனால் பயங்கர அப்செட்டில் இருக்கும் விக்னேஷ்க்கு உலக நாயகன் கமலஹாசன் தோள் கொடுத்து தூக்கி விட முடிவெடுத்துள்ளார்.

Also Read: ரஜினிக்காக எழுதிய கதையில் நடிக்கும் வாரிசு நடிகர்.. பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள ராஜ்கமல் நிறுவனம்

விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து விலகிய பிறகு யாரை வைத்து படத்தை இயக்குவது என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், கடைசியில் அவர் விஜய் சேதுபதி தான் என்ற தகவல் வந்தது. அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கப் போவதாக தகவல் வந்தன. அந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

மேலும் கடைசி நிமிடத்தில் நம்ப வச்சு கழுத்தை அறுத்த அஜித்தை இந்த படத்தின் மூலம் பழிவாங்கவேண்டும் என்று விக்னேஷ் சிவன் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக இந்த படத்தை ஏகே 62 படம் வெளியாகும் அதே தினத்தில் ரிலீஸ் செய்து அஜித் படத்தின் வசூலை காலி செய்ய வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளாராம்.

Also Read: குழந்தைகளை நெஞ்சோடு அணைத்தபடி வந்த நயன்-விக்கி.. ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

இந்த படத்தை உலகநாயகன் கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் 45 கோடி பட்ஜெட்டுடன் தயாரிக்கிறது. பிரதீப் ரங்கநாதன் இரண்டாவது படத்தில் அவ்ளோ பெரிய பட்ஜெட்டை கமல் முடிவு செய்து தயாரிப்பது ஆச்சரியமாக உள்ளது.

-அப்படி என்ன அவர் செய்துவிட்டார், நல்ல திறமைசாலி அதற்காக 50 கோடி பட்ஜெட்டா என கோலிவுட் வாயை பிளக்கிறது. கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த பிரதிப் ரங்கநாதன், சமீபத்தில் நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இயக்குனருக்கு கதை சொல்லும் அஜித்.. அதுவும் ஆங்கில பட சிடி உடன் சுற்றி வருகிறாராம்.!

- Advertisement -

Trending News