நார வாயால் சிக்கி சின்னா பின்னமான சித்தார்த்.. கடைசியில் கமல் காட்டிய கருணை

சினிமாவில் என்னதான் ஹீரோவாக நடித்திருந்தாலும் அவர்களுடைய உண்மையான கேரக்டர் என்றைக்குமே மாறாமல் சில நேரங்களில் வெளிப்படும். அப்படித்தான் நடிகர் சித்தார்த் பல படங்களில் ஹீரோவாக நடித்து மக்களை கவர்ந்திருந்தாலும் அவருடைய கேரக்டர் எப்போதுமே சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று தேவையில்லாமல் எதையாவது பேசி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொள்வது தான் இவருடைய வேலை.

சித்தார்த் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் இவர்தான் என்று சொல்லலாம். படங்களில் ஹீரோவாக நடிப்பதில் பிஸியாக இருக்கிறாரோ என்னமோ ஆனால் எப்பொழுதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். அதனாலேயே இவரைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே வரும்.

Also read: சின்ன கேரக்டர் மூலம் சிகரம் தொட்ட சித்தார்த்.. 14 ஆண்டுகளில் நடிகராக அடையாளப்படுத்திய 6 படங்கள்

இப்படி தான் கடந்த வருடம் இயக்குனர் சங்கர் மகள் அதிதியை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளிவந்தது. அதற்கு ஏற்ற மாதிரி இவர்கள் ஒன்றாக சுற்றித்திரிந்த போட்டோக்களும் வெளியாகி வைரலானது. அதனால் ரொம்ப நாளாவே சினிமாவில் ஆளையே காணும். இவருடைய ஆர்வமும் படத்தில் நடிப்பது குறைந்து விட்டது என்றே சொல்லலாம்.

அது மட்டுமில்லாமல் ஒருமுறை பிரைம் மினிஸ்டர் விஷயத்தில் பிஜேபிக்கு எதிராக பல ட்விட்களை போட்டு அதிகமான பிரச்சனையில் சிக்கிக் கொண்டார். அடுத்ததாக பேட்மிட்டன் சாய்னா நேவால் இடம் அசிங்கமாக ட்வீட் போட்டு பெரிய பிரச்சனை பூதாகரமாக வெடித்ததால் அவரிடம் மன்னிப்பு கேட்டார். அதிலிருந்து இவருடைய பெயர் பெரிய அளவில் கெட்டுப் போய் எந்த பட வாய்ப்புகளும் வராமல் சுத்திக்கிட்டு இருந்தார்.

Also read: சித்தார்த் பட வாய்ப்பு தந்தா படுக்கையை பகிர ரெடி.. உச்சகட்ட ஏக்கத்தில் பேசிய நடிகை

இதற்குப் பிறகும் ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கும் போது இவருடைய வாயை வைத்து சும்மா இல்லாமல் பிரச்சனையே தேடிப்போய் வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இவருக்கு என்னமோ சோசியல் மீடியாவில் எதையாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் தான் தூக்கமே வரும். அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் தேடிப் போய் வம்பை இழுத்துக் கொண்டிருக்கிறார்.

அதனால் இப்போதைக்கு இவரிடம் கைவசம் எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கிறார். இதை பார்த்த கமல், சித்தார்த் இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு சான்ஸ் கொடுத்து இருக்கிறார். இந்தப் படத்தில் இருந்து இவருடைய முழு கவனமும் நடிப்பதில் மட்டும் இருந்தால் இவர் ஒரு நல்ல ஹீரோவாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

Also read: பொன்னியின் செல்வன் விழாவில் சேட்டை செய்த சித்தார்த்.. அரங்கத்தை திரும்பிப் பார்க்க வைத்த திரிஷா

- Advertisement -