விக்ரம் படம் வெளிவருவதற்கு முன் 31 கோடி லாபம் பார்த்த கமல்.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த லோகேஷ்

தனது மாறுபட்ட கதைகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் வளர்ந்து வரும் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய மூன்று படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் கமல் மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். எனவே இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக கமல்ஹாசனும், வில்லனாக விஜய் சேதுபதியும், விஞ்ஞானியாக பகத் பாசிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

vikram-cinemapettai
vikram-cinemapettai

ஒரு சில நாட்கள் மட்டுமே இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை வியாபாரம் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கோல்ட்மேன் மைண்ட் என்ற நிறுவனம் விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை 31 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 70 கோடி என தகவல் வெளியாகி உள்ள நிலையில், இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை மட்டும் மொத்த பட்ஜெட்டில் கிட்டத்தட்ட பாதி தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது. இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -