பிரபல எழுத்தாளரின் கதையை திருடிய கமல்ஹாசன்.. ஆதாரத்தை வெளியிட்ட பிரபலம்

தமிழ் மக்களின் மனதை காந்தம் போல ஈர்த்துக் கொண்டவர் தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். இவருடைய படைப்புகளம் சிறுகதை ,புதினம், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து விரிந்தது ஆகும். ஜெயகாந்தன் அவர்கள் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர்.

அவருடைய ஆரம்ப காலகட்டங்களில் பல்வேறு வேலைகளை செய்து இருக்கிறார். அவர்களுக்கு இடையே கிடைக்கும் நேரங்களில் சிந்தித்தும் இருக்கிறார். இவருடைய இலக்கிய படைப்புப் பயணம் 1950 இல் இருந்து தொடங்கியது சரஸ்வதி தாமரை ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. எந்த ஒரு கதையாக இருந்தாலும் அவர் கதாபாத்திரங்களை மிகவும் இயல்பாகவும் நம் கண்களில் காட்சியாக தோன்றும் அளவிற்கு தத்ரூபமாக எழுதியிருப்பார்.

இவருடைய படைப்பிற்கு ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் சாகித்ய அகாதமி விருது ,இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது, பத்மபூஷண் போன்ற பல விருதுகள் ஆகும். இவருடைய படைப்புகளை திரைப்படமாகவும் இயக்கியுள்ளார்.

jayakanthan
jayakanthan

உன்னைப் போல் ஒருவன் ,சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற திரைப்படங்களாக வெளிவந்தன. சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் பல விருதுகளை பெற்று தந்துள்ளது. இந்நிலையில் தற்போது மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடைய மகள் தீபலட்சுமி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

தங்கள் குடும்பம் நடிகர் கமலஹாசன் மீது கோபமாக உள்ளதாக கூறியிருந்தார். நடிகர் கமல் ஏற்கனவே தங்களுடைய குடும்பத்தினரிடம் அனுமதி பெறாமல் ஜெயகாந்தன் அவர்கள் எழுதி படமாக்கப்பட்ட “உன்னைப்போல் ஒருவன் “திரைப்பட தலைப்பை கமலஹாசன் அவருடைய திரைப்படத்திற்கு வைத்துள்ளார். மீண்டும் “சில நேரங்களில் சில மனிதர்கள் “என்று தலைப்பை பயன்படுத்துவதற்கான அனுமதியை தங்களுடன் குடும்பத்தில் பெறவில்லை என்று அப்பதிவில் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -