காட்டுத் தீயாய் பரவிய சரத்பாபு இறப்பு வதந்தி.. உண்மை என நம்பி உலக நாயகன் போட்ட ட்வீட்

நேற்றைய தினம் மனோபாலாவின் இறப்புச் செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில், இரவு நடிகர் சரத்பாபு இறந்ததாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரவத் தொடங்கியது. இந்தச் செய்தி இணையத்தில் காற்று தீயாய் பரவ சில மணி நேரங்களிலேயே சரத் பாபுவின் சகோதரி அவர் நலமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டார்.

ஆனாலும் இது வதந்தி என்று தெரியாமல் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தனர். அதுமட்டும்இன்றி சரத்பாபுவிற்கு இரங்கலையும் தெரிவித்து இருந்தனர். ஏனென்றால் கடந்த சில நாட்களாக சரத்பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Also Read : மொக்கை வாங்கிய கமலின் அந்த படம்.. ஆஸ்கர் படத்திற்கு நிகர் என பெருமை பாடும் இயக்குனர் ராம்

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் வேண்டுமென்றே அவர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் செய்தியை பரப்பி உள்ளனர். இந்நிலையில் சரத்பாபு ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மனோபாலாவின் இறப்பிற்கு உலகநாயகன் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

அதாவது மனோபாலாவின் மறைவு செய்தி பெரும் துயரத்தை அளிப்பதாகவும், சினிமாவின் ஆர்வலர் என்பதற்கு அவரே முதன்மையான அடையாளம் என்றும் தனது இரங்கலை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் வதந்தியாக வந்த சரத்பாபுவின் இறப்புச் செய்திக்கும் கமல் இரங்கல் தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

Also Read : கமல் மீது காதல் வலையில் விழுந்த 6 நடிகைகள்.. திருமணத்தால் நொந்து போன ஆட்டுக்கார அலமேலு

அதாவது சரத்பாபு நண்பர், நல்லவர், என் நலன்விரும்பி, பல படங்களில் பல கதைகள். படங்கள் உங்களோடும், எம் கதைகள் எம்மோடும் வாழும் அவர் நினைவும்.. உங்கள் கமலஹாசன் என்று ஒரு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அதன் பிறகு சரத்பாபு இறந்துவிட்டதாக வந்த செய்தி புரளியே என தெரிந்தவுடன் அந்த ட்வீட்டை கமல் நீக்கி உள்ளார்.

உண்மையாகவே கமல் சரத்பாபுவிற்கு இரங்கல் தெரிவித்தாரா, இல்லை சரத்பாபுவின் இறப்பு செய்தி போல இதுவும் ஒரு புரளியா என்பது தெரியவில்லை. மேலும் இப்போது சரத் பாபுவின் உடல் நிலை முன்னேறி வருவதாக அவரது சகோதரி கூறியுள்ள நிலையில், அவர் விரைவில் பூரண நலம் பெற்று திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

kamal-sarathbabu

Also Read : ஜவான் இந்த கமல் படத்தின் காப்பியா.. மீண்டும் திருட்டு கதையில் சிக்கிய அட்லீ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்