அடுத்த நாயகன் அவர்தான் என விக்ரம் பட நாயகருக்கு தனது பட்டத்தை வழங்கியுள்ளார், உலகநாயகன் கமலஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் 500 கோடி வரை வசூல் சாதனை படைத்த நிலையில் திரையரங்குகளில் 50 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனிடையே விக்ரம் திரைப்படத்தின் 50 நாட்கள் வெற்றி விழாவை கொண்டாடும் விதமாக விக்ரம் 50 நிகழ்ச்சியில்,கமலஹாசன் கலந்துகொண்டு அவர் நடித்த பல திரைப்படங்களின் அனுபவங்களை பேசி மகிழ்ந்தார். இதனிடையே விக்ரம் திரைப்படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட கமல் வெறும் பத்து நிமிட காட்சிகளில் மட்டுமே இடம் பெற்ற சூர்யாவை பற்றி பேசியுள்ளார்.
அதில் சூர்யாவின் கதாபாத்திரமான ரோலக்ஸ் கதாபாத்திரம் ஹீரோ கிடையாது, ஆனால் அந்த கதாபாத்திரம் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கதாபாத்திரம் என கமலஹாசன் தெரிவித்தார் மேலும் அடுத்த நாயகன் சூர்யா என அந்த மேடையில் அனைவரது முன்னிலையிலும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மேலும் விக்ரமுடைய வெற்றிக்கு ஒரே காரணம் ரசிகர்கள் தான் என்றும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் படத்தை ரசிகர்கள ரசிப்பார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் இன்றைய விக்ரம் எப்படி வெற்றி அடைந்ததோ அதே போல் தான் சகலகலா வல்லவன் அன்று வெற்றியடைந்தது என்று கமலஹாசன் மகிழிச்சியுடன் தெரிவித்தார்.
இதனிடையே தற்போது நடிகர் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான 68வது தேசிய விருதை வாங்கி உள்ள நிலையில், உலகநாயகன் கமலஹாசன் அவரை அடுத்த நாயகன் என்று அறிவித்தது சூர்யாவின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான சூர்யாவிற்கு கமலஹாசன் தன்னுடைய உலகநாயகன் என்ற பட்டத்தை வழங்கி அழகு பார்த்தது கமலஹாசன் உடைய பெருந்தன்மையை மேலும் உயர்த்தியுள்ளது. நடிகர் சூர்யா முதன்முறையாக வில்லனாக நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.