கமலின் குரலில் மரண ஹிட்டடித்த 10 பாடல்கள்.. நாயகன் முதல் விஸ்வரூபம் வரை

உலகநாயகன் கமலஹாசன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இலக்கியவாதி, அரசியல்வாதி, தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். தமிழ் சினிமாவில் கமலஹாசன் பல பாடல்கள் பாடி இருந்தாலும் உலக நாயகன் குரலில் வெளியான சிறந்த பத்து பாடல்களைப் பார்க்கலாம்.

நாயகன்: மணிரத்தினம் இயக்கத்தில் 1984 இல் வெளியான திரைப்படம் நாயகன். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் புலமைப்பித்தன் வரிகளில் தென்பாண்டி சீமையிலே என்ற பாடலை கமலஹாசன் பாடியிருந்தார்.

மைக்கேல் மதன காமராஜன்: சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1990 ல் வெளியான திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படத்தில் இடம்பெற்ற சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் பாடல் முதலில் யேசுதாஸ் பாடுவதாக இருந்தது, அவரது தேதி கிடைக்காததால் கமல்ஹாசனையே பாடவைத்து வெற்றி கண்டார் இளையராஜா.

குணா: சந்தானபாரதி இயக்கத்தில் 1991 இல் கமலஹாசன், ரேகா, ரோஷினி நடிப்பில் வெளியான திரைப்படம் குணா. இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களை ஜானகியுடன் இணைந்து பாடியிருந்தார் கமலஹாசன். அதில் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பாடல் மிகப் பெரிய ஹிட்டானது.

தேவர் மகன்: பரதன் இயக்கத்தில் 1992 இல் வெளியான திரைப்படம் தேவர் மகன். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் வாலி வரிகளில் உருவான சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு என்ற பாடலை எஸ் பி பி உடன் இணைந்து கமலஹாசன் பாடியிருந்தார்.

அவ்வை சண்முகி: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. தேவா இசையமைத்த இப்படத்தில் சுஜாதா, கமலஹாசன் இணைந்து ருக்கு ருக்கு பாடலை பாடி இருந்தார்கள்.

தெனாலி: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2000 ஆண்டு வெளியான திரைப்படம் தெனாலி. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் உள்ள இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ சேதி கேட்ட சந்தோஷங்கோ என்ற பாடலை கமலஹாசன் சித்ரா இருவரும் இணைந்து பாடி இருந்தனர்.

அன்பே சிவம்: சுந்தர் சி இயக்கத்தில் 2003இல் கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பே சிவம். எலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி, யார் யார் சிவம் நீ நான் சிவம் என்ற இரண்டு பாடல்களை கமலஹாசன் பாடியிருந்தார்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ்: கமல்ஹாசன், சினேகா, பிரபு, பிரகாஷ்ராஜ், நாகேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். வைரமுத்து வரிகளில் கலக்கப்போவது யாரு என்ற பாடலை கமலஹாசன் பாடியிருந்தார்.

விருமாண்டி: கமல்ஹாசன் இயக்கி, நடித்து 2004-ல் வெளியான திரைப்படம் விருமாண்டி. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் கமலஹாசன் பல பாடல்கள் பாடி இருந்தாலும் கமலஹாசனே வரிகள் எழுதி ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடிய உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

விஸ்வரூபம்: கமலஹாசன் இயக்கத்தில் 2013ல் வெளியான திரைப்படம் விஸ்வரூபம். வைரமுத்து வரிகளில் கமலஹாசன், சங்கர் மகாதேவன் இருவரும் இணைந்து பாடிய உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே என்ற பாடல் இதில் இடம் பெற்ற நடனமும் ஹட் ஆனது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்