கமலிடம் புடிச்சதே இதுதான்.. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும்

kamal haasan
kamal haasan

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் கமலஹாசன். சினிமாவில் பல சாதனைகள் புரிந்து எட்டாத உயரத்தில் உள்ளார் உலகநாயகன்.

தன்னுடைய நடிப்புக்காக பல அர்ப்பணிப்புகள் செய்தவர். அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடமிட்டு நடித்தது, தசாவதாரம் படத்தில் பல வேடங்களில் நடித்தது இன்னும் எண்ணிலடங்கா பல சாதனைகளை புரிந்துள்ளார் கமலஹாசன்.

கமலஹாசன் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். நடிகர்கள் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்வார்கள். ஆனால் கமலஹாசன் சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து வருகிறார்.

கமலஹாசனை பற்றி சினிமாவில் பல கிசுகிசுக்கள் வருவது உண்டு. அவருடைய படங்களில் நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாக நடிப்பதால் கமலுடன் பல நடிகைகளை சேர்ந்து கிசுகிசு வந்தது. கமலைப் பற்றி பல அவதூறுகள் வந்தாலும் பிறருக்கு மரியாதை கொடுப்பதில் கமலை அடித்துக் கொள்ளவே முடியாது.

அதுமட்டுமல்லாமல் கமலஹாசன் யாரையும் ஒருமையில் பேச மாட்டாராம். எல்லோருக்கும் சமமான மரியாதை கொடுப்பாராம். அதை நாம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே பார்த்திருப்போம். முன்கூட்டியே தெரிந்தவராக இருந்தாலும் சரி, புதிதாக தெரிந்தவராக இருந்தாலும் சமமான மரியாதை கொடுப்பார்.

சில நேரங்களில் கடுமையாக இருந்தாலும் தான் உபயோகிக்கும் வார்த்தையில் மிகவும் கவனமாக இருப்பார் கமலஹாசன். இவர் பல வெற்றிகளைக் கண்டு மிகப்பெரிய உச்சத்தில் உள்ள போதும் மற்ற சக நடிகர்களை அவமதித்ததே இல்லை.

Advertisement Amazon Prime Banner