கமல்ஹாசனுடன் இணையும் வெற்றிமாறன்.. பேட்டியில் உளறிய பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் ரசிகர் அதனால் கண்டிப்பாக இவரது இயக்கத்தில் மாஸ்ஸானா காட்சியில் இருக்கும் என்பதால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஒருபக்கம் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றொரு பக்கம் தொடர்ந்து படங்கள் இன்னொரு பக்கம் அரசியல் என அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகிறார். இதனால் தற்போது கமல்ஹாசனுக்கு ஓய்வு எடுப்பதற்கு கூட நேரமில்லை என பலரும் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு கமல்ஹாசன் தற்போது பிஸியாக சினிமாவில் வலம் வருவதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூறி வருகின்றனர்.

விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் பாபநாசம் 2 படத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தை விக்ரம் படத்திற்கு பிறகு படப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் படக்குழுவினர் கூறிவந்தனர். ஆனால் சமீபத்திய பேட்டியில் பாபநாசம் 2 படத்தில் கமல் ஹாசன் நடிக்க மாட்டார் என நடிகை ஸ்ரீபிரியா கூறியுள்ளார். அதாவது அவர் அளித்த பேட்டியில் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என தெரிவித்துள்ளார்.

papanasam-2-cinemapettai
papanasam-2-cinemapettai

இதன்மூலம் கமல்ஹாசன் தற்போது பாபநாசம் 2 படத்தில் நடிக்க மாட்டார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்துள்ளதால் கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறும் என கூறி வருகின்றனர். இப்படத்தில் கமல்ஹாசன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளதால் தற்போது அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனைப் பார்க்கலாம் எனவும் கூறி வருகின்றனர். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்