பாபநாசம் 2 படத்தில் நடிக்க தயங்கும் கமல்.. இதுதான் காரணமாம்

மலையாளத்தில் 2013ல் ஜீத்து ஜோசப் இயக்கி வெளிவந்த திரைப்படம் த்ரிஷ்யம். இப்படத்தில் மோகன்லால், மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் பாபநாசம் என்ற பெயரில் இப்படம் எடுக்கப்பட்டது. பாபநாசம் படத்தில் கமல்ஹாசன், கவுதமி மற்றும் கலாபவன் மணி ஆகியோர் நடித்திருந்தனர். தமிழிலும் இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இதனால் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து இருந்தார்.

பெரும் வெற்றிபெற்ற படங்களின் அடுத்த பாகங்களின் கதை, முந்தைய படத்தின் துல்லியமான தொடர்ச்சியாக அமைவது மிகவும் குறைவு. அப்படியே அமைந்தாலும் ரசிக்கும்படியான திரைப்படமாக அமைவது இன்னும் குறைவாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த இரண்டு விஷயங்களிலும் அருமையாக கையாண்டிருந்தார்.

இதனால் திரிஷ்யம் 2 படம் எல்லா நாடுகளிலும் பிரபலமாகி மிகப் பெரிய ஹிட்டானது. இந்நிலையில் பாபநாசம் 2 படத்தை இயக்க ஜீத்து ஜோசப் தயாராக உள்ளார். தற்போது கமல், கௌதமி இருவரும் பிரிந்து உள்ளதால் இப்படத்தில் மீண்டும் இணைவது கடினம்.

திரிஷ்யம் 2 படத்தின் மூலம் கதை எல்லோருக்கும் தெரிந்ததால் பாபநாசம் 2 படம் எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்பது கேள்விக்குறிதான். இதனால் பாபநாசம் 2 படத்தில் நடிக்க கமல் தயங்குகிறார். அத்துடன் கமல் விக்ரம் மற்றும் இந்தியன் 2 படங்களில் பிசியாக உள்ளார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை