கமலஹாசனின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட 2 முக்கிய படங்கள்.. இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போவீங்க!

தமிழ்சினிமாவில் சந்தானபாரதி பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார். சந்தானபாரதி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது இவர் நடித்த காமெடி படங்கள்தான்.

ஆனால் இவர் இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று அப்படி இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்களைப் பற்றி பார்ப்போம்.

சந்தானபாரதி பலரும் சோசியல் மீடியாவில் அமிர்ஷா என்று தான் கிண்டல் செய்வார்கள். அதன்பிறகு பாரதிவாசு என பலரும் கூறினர். அதற்கு காரணம் பி வாசு, சந்தான பாரதியின் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இப்படி அழைத்தனர்.

santhana-bharathi
santhana-bharathi

இவர்கள் இருவரும் சேர்ந்து சினிமாவில் வளர்ந்த காலத்தில் 1981ஆம் ஆண்டு பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தை இயக்கியிருந்த இப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

சந்தானபாரதி கமலஹாசனை வைத்து குணா, மகாநதி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே கமலஹாசனின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படம் என்றே கூறலாம்.

வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் விமர்சனரீதியாக இன்று வரை இந்த இரண்டு படங்களை பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டு தான் வருகின்றன. சின்ன மாப்பிள்ளை பிரபு வைத்து இயக்கியிருந்தார். இந்த படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்