போன வாட்டி மாதிரி ஆகாது, நம்பு.. இளம் நடிகைக்கு வாக்கு கொடுத்த கமல்

அரசியலில் களமிறங்கி விரைவில் முதலமைச்சர் ஆகி விடலாம் என்ற கனவில் வந்தவருக்கு அரசியல் பெரிய அளவு கைகொடுக்கவில்லை. இதனால் கமலஹாசன் தற்போது தன்னுடைய சினிமா தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

ஒரு பக்கம் நடிப்பு தயாரிப்பு ரியாலிட்டி ஷோ என எந்தெந்த வகையில் சம்பாதிக்க முடியுமா அந்த வகையில் தன்னுடைய பாதையை திருப்பி வெகுவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மனுஷன் சினிமாவில் எவ்வளவு சம்பாதித்தாலும் தனக்கென்று வைத்துக் கொள்வது கிடையாது. அடுத்த வருட அரசியலுக்கு செலவுக்கு பணம் தேவையல்லவா அதற்காக இப்போதே உழைக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஷங்கர் மற்றும் லைகா கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. முன்னதாக இதில் காஜல் அகர்வால் நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாம் படக்குழு.

ஆனால் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆவதற்கு திரிஷா முதலில் சம்மதிக்கவில்லை எனவும் அதன் பிறகு கமலஹாசன் தான் சமாளித்து சம்மதிக்க வைத்ததாகவும் கூறுகின்றனர். அதற்கு காரணம் கமல்ஹாசன் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து நடித்த தூங்காவனம் திரைப்படம் நினைத்த அளவு வெற்றியை பெறவில்லை என்பதுதான்.

தூங்காவனம் படத்தில் நடித்தால் இழந்த மார்க்கெட்டை மீட்டு விடலாம் என திரிஷாவுக்கு ஆசை காட்டி அந்த படத்தில் நடிக்க வைத்து இருந்த மார்க்கெட்டும் பறிபோக வைத்துவிட்டாராம் நம்ம உலக நாயகன். இதனாலேயே கமல் படத்தில் நடிக்காமல் தவிர்த்து வந்த திரிஷா தற்போது ஷங்கர் படமென்பதால் ஓகே சொல்லி சம்பளமும் பேசி விட்டதாக கூறுகின்றனர். படப்பிடிப்பு தொடங்கும்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்