கமல் படமா, வேண்டவே வேண்டாம்.. ஒதுங்கிய நடிகை

உலகநாயகன் கமலஹாசன் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் திடீரென படத்திலிருந்து முன்னணி நடிகை ஒருவர் விலகி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைத்து உள்ளது. இதுவே படத்திற்கு பின்னடைவாக அமைந்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்தை எப்படியாவது ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவர வேண்டுமென திட்டமிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கமலஹாசன் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் கமலஹாசன் நடிப்பில் வேறு சில படங்களுக்கான பேச்சுவார்த்தைகளும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

அதுபோக பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் எனவும் தெரிகிறது. இந்த நேரத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெறுமா என்ற சந்தேகம் பிரபல முன்னணி நடிகையான காஜல் அகர்வாலுக்கு வந்துவிட்டது போல. இப்போதைக்கு இந்த படம் நடக்கிற மாதிரி தெரியவில்லை என கம்பி நீட்டி விட்டாராம்.

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல ஏற்கனவே இந்தியன் படத்தின் படப்பிடிப்புகள் சரியாக நடைபெறாமல் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கும் நிலையில் தற்போது காஜல் அகர்வால் பாதி காட்சிகள் நடித்து விட்டு விலகி இருப்பதால் மீதியை வேறு ஒரு நடிகையை வைத்து எடுக்க முடியாது.

இதனால் மீண்டும் காஜல் அகர்வால் பகுதிகளை வேறு ஒரு நடிகையை வைத்து மொத்தமாக ஷூட் செய்ய வேண்டிய நிலைமை. அதுபோக ஏற்கனவே ஷங்கர் இரண்டு படங்களை இயக்கி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், என்ன செய்யப் போகிறாரோ.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்