புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நீ எல்லாம் ஒரு மனுஷனா.? அப்பவே மேடையில் கமலஹாசனை தாக்கிய சரத்குமார்

பிரச்சனை வந்தால் ஊரைவிட்டு போகிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் மனிதர்களா என கமலஹாசனை நடிகர் சரத்குமார் வெளிப்படையாகவே தாக்கி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு நடிகர் சங்கம் கட்டிடம் விவகாரத்தில் அதிகமான பிரச்சனைகள் இருந்த நிலையில், நடிகர் சங்கம் இரண்டு அணியாக பிரிந்தது. அப்போது சரத்குமார் தலைமையில் நடிகர் சங்கம் நடந்து கொண்டிருந்தது. அப்போது உலகநாயகன் கமலஹாசன் நடிகர் சங்கத்தின் பிரச்சனைகளில் எதிலும் தலையிடாமல் இருந்துள்ளார்.

விஸ்வரூபம் படம் வெளிவரும்போது அரசியல் தலையீடுகள் இருந்ததால் அந்த படத்தை வெளியிட மறுத்தனர். இதனால் தமிழ்நாட்டை விட்டு வெளிநாடு செல்ல போகிறேன் என்று வெளிப்படையாகக் கூறினார் கமல்ஹாசன், இதை வைத்து சரத்குமார் ஆவேசமாக கமலஹாசனை பற்றி மேடையில் பேசினார்.

அதில் பிரச்சனை வந்தால் ஊரை விட்டு போவேன் என்று சொல்பவர்கள் எல்லாம் மனிதர்களா என்றும் வேதனை, சோதனை எதுவாக இருந்தாலும், இங்கிருந்து பார்க்கவேண்டும் என்று சரத்குமார் கமலஹாசனை வெளிப்படையாக தாக்கிப் பேசினார்.

மேலும் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் அனைவரும் நடிகர்கள்தான் ஒரு நடிகனுக்கு என்ன திறமை இருப்பதை அறிந்து அவரை நடிக்க வைப்பது இயக்குனர்களின் கையில் தான் உள்ளது. எங்களுக்கும் நடிக்க தெரியும், நானும் ஆங்கிலத்தில் பேசி நடிப்பேன் எனவும், அந்த மேடையில் கமலஹாசனை போன்று மிமிக்கிரி எல்லாம் சரத்குமார் செய்து காட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி, கமலஹாசனின் திரைப்படம் வெளியிடுவதற்காக நான் பட்ட சிரமத்தை அவர் நன்றி மறந்து விட்டதாகவும் சரத்குமார் ஆவேசமாக பேசினார். இந்த நிகழ்விற்கு பின்பு தான் சரத்குமார் நடிகர் சங்கத்திலிருந்து வெளியேறினார் என்பது கூடுதல் தகவல் .

அதன் பிறகு சரத்குமார் படங்களில் எதிலும் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சரத்குமார் நடித்துள்ளார். , ஆறு வருடங்களுக்கு முன்பு அவர் கமலஹாசனை வெளிப்படையாக தாக்கி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கட்சி தொடங்கிய போது கமலை தேடி சென்று வாழ்த்துக்களை தெரிவித்தவர் சரத்குமார், இந்த சினிமாக்காரர்களை நம்பவே முடியல!

- Advertisement -

Trending News