ஹேராம் படத்திற்காக ஷாருக்கான் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என அழைக்கப்படும் கமல்ஹாசனும், ஹிந்தி சினிமாவின் கிங் ஆப் பாலிவுட் என அழைக்கப்படும் ஷாருக்கானும் இணைந்து நடித்த படம்தான் ஹேராம். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பல திறமைகளைக் கொண்ட கமல்ஹாசன் தான் இப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மகாத்மா காந்தியின் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்காக ஷாருக்கானுக்கு கோடிகளில் சம்பளம் வழங்கப்பட்டதாக அந்த சமயத்தில் வதந்தி பரவியது. ஆனால் இதுகுறித்து ஷாருக்கான் இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்நிலையில், இந்த படத்திற்காக ஷாருக்கானுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தேன் என்பது குறித்து கமல் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.hey-ram-Kamal-Haasan

இதுகுறித்து வீடியோவில், “படத்தின் பட்ஜெட் பற்றி ஷாருக்கானுக்கு எதுவும் தெரியாது. இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. வாட்ச் ஒன்றை தான் அவருக்கு பரிசாக கொடுத்தேன். இந்த படத்தை இந்தியில் வெளியிடும் உரிமத்தை ஷாருக்கானுக்கு கொடுத்ததில் மகிழ்ச்சி” என கமல் கூறி உள்ளார்.

ஹே ராம் படம் வெளியான காலகட்டத்தில் ஷாருக்கான் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு நடிகர் படத்திற்கு சம்பளமாக ஒரு வாட்ச்சை மட்டும் வாங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -