பிக்பாஸ் நிகழ்ச்சியால் சர்ச்சையில் சிக்கிய கமலஹாசன்.. தமிழக அரசு நோட்டீஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியில் உலகநாயகன் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் அறிவுரை கூறிவருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் 2 முறை கமலஹாசன் வருவதால் ரசிகர்களிடையே மிகவும் நெருக்கமாக உள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் கமலஹாசன், அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய பின்னர் லேசான இருமல் இருந்துள்ளது, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது கமலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கமல் கொரோனா வைரஸ் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் அந்த வார பிக் பாஸ் யார் தொகுத்து வழங்குவார் என பல பிரபலங்களின் பெயர் சமூக வலைத்தளங்களில் வெளியானது. கமலுக்கு பதிலாக அந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

கமலஹாசன் பூரண நலம் பெற்று கடந்த 4ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று மருத்துவமனை அறிக்கை விடுத்திருந்தது. அதன்படி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட கமல் நேராக பிக் பாஸ் நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று அன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு 7 நாள் வீட்டிலேயே தங்களை தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் . கமலஹாசன் நேரடியாக விஜய் டிவியின் பிக் பாஸ்க்கு சென்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனால் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா விதி முறைகளை மீறி கமல் நேராக படப்பிடிப்புக்கு சென்றதால், இது தொடர்பாக தமிழக மருத்துவத் துறை விளக்கம் கேட்டு கமலுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கமலஹாசனுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளதாம்.  ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் எதற்கு தலைபோகிற விஷயமாக இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்