ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் தமிழ் சினிமாவில் இரு ஜாம்பவான்களாக தற்போது வரை தங்களை நிலை நிறுத்தி வருகின்றனர். இவர்களது ரசிகர்களிடையே போட்டி இருந்தாலும் இவர்களுக்கு இடையில் எந்த ஒரு போட்டியும் இல்லை என்பது திரைத்துறையில் உள்ள பல பிரபலங்களுக்கும் தெரியும். அந்த அளவிற்கு நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.
ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் எந்த ஒரு இடத்திலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை. இதுவரைக்கும் பல பிரபலங்களும் வெளி உலகிற்கு நல்லவர்களாக காட்டிக் கொண்டாலும் சினிமாவுலகில் போட்டியாளர்களாக கருதப்படுவார்கள். ஆனால் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் சினிமாத்துறையில் அவர்களுக்கென தனிப்பட்ட பாதையை உருவாக்கி தங்களது வித்தியாசமான படைப்புகளை கொடுத்து வருகின்றனர்.
ஒருமுறை ரஜினிகாந்திடம் தொகுப்பாளர் ஒருவர் சமீபத்தில் நீங்கள் சந்திரமுகி படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளீர்கள் அதுவும் வேட்டையன் கதாபாத்திரம் அற்புதமாக இருந்தது. அது ஒரு தனி கதாபாத்திரமாகவே ஒரு படத்தில் நடித்து இருக்கலாம் என கூறி அவரை பெருமைப்படுத்தும் வகையில் தொகுப்பாளர் பேசினார்.
ஆனால் ரஜினிகாந்த் அந்தப் பெருமையை ஏற்றுக் கொள்ளாமல் உடனே தனது நண்பரான கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் 10 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் நீங்கள் நான் நடித்த இரண்டு கதாபாத்திரத்தை பற்றி பெருமையாக பேசுகிறீர்களே என கூறினார். அந்த அளவிற்கு ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் பல பேட்டிகளில் பேசியுள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா திரைப்படம் 3.30 மணி நேரத்திற்கு உருவானது. அதனால் ரஜினிகாந்த் படத்தை இரண்டு இன்டர்வெல் பிளாக் வைத்துவிடலாம் என கேஸ் ரவிக்குமாரிடம் கூறியுள்ளார். ஹிந்தியில் கூட ஒரு படம் இப்படி வெளியாகி உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இதைப் பற்றி கமல்ஹாசனிடமும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதற்கு கமலஹாசன் தமிழ் படத்திற்கு இது செட்டாகாது இதனை இயக்குனர் இடமே விட்டுவிடுங்கள் நீங்க தலையிடாதீர்கள் அவருக்கு தெரியும் என கூறியுள்ளார். பின்பு படையப்பா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.