கமல் வெளியிட்ட அதிர்ச்சியான ட்விட்டர் பதிவு.. பிக்பாஸுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் காதி ஆடைகளை மேற்கிந்திய நாடுகளில் பிரபலமடைய செய்வதற்காக அண்மையில் அமெரிக்கா சென்றார்.

தற்போது சென்னை திரும்பிய கமலுக்கு லேசாக இருமல் இருந்துள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் கொரனோ தோற்று உறுதியானது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்கா பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்தொற்று நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டிருந்தார்.

இதனால் கமலஹாசன் தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் தனிமைப் படுத்தி உள்ளார். கமல் கொரனோ தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் செலுத்தி உள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் அனைவரும் உலகநாயகன் கமலஹாசன் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கமலஹாசன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளதால் இந்த வார பிக்பாஸில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் பிக்பாஸில் சில மாற்றங்கள் வரலாம் எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

kamal-twit-covid
kamal-twit-covid