வெற்றிமாறனை ஓரம்கட்டிய கமல்.. சர்ச்சை இயக்குனருடன் அதிரடியான கூட்டணி

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா.ரஞ்சித் தொடர்ந்து இயக்கிய மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன. ரஜினியை மாறுபட்ட கதாபாத்திரத்தில் காட்டிய ரஞ்சித் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைந்தார்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மாபெரும் வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் அளவிற்கு வெற்றி பெற்றது.

விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்ற இப்படத்தை பல திரைபிரபலங்கள் பாராட்டினார்கள். அவர்களில் ஒருவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்த பின்னர் கமல்ஹாசன் ரஞ்சித்தை அழைத்து பாராட்டினாராம்.

தற்போது இவர்கள் இருவர் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பின்னர் ரஞ்சித் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மேலும் நடிகர் கமல்ஹாசன் கடந்த 7ஆம் தேதி அவரது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது கமலை சந்தித்த ரஞ்சித் கமலிடம் கதை சொல்லி உள்ளார். கதை பிடித்து விட்டதால் இணைந்து பணியாற்ற கமலும் ஓகே சொல்லி விட்டாராம். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்