ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கமலுக்கு கிடைத்த புது வலது கரம்.. அண்ணனுக்குப் பின் உலக நாயகனுக்கு வந்த நம்பிக்கை

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல் ரொம்பவும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்திற்காக வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட சண்டை பயிற்சியாளர்களுடன் அவர் உரையாடிய போட்டோ வெளியாகி இருந்தது. அதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து கமல் மணிரத்னம் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன் நிறுவனத்தின் தயாரிப்பு வேலைகளிலும் அவர் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் அடுத்துடுத்து பல திரைப்படங்களை தயாரிப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார் அதன் முதல் கட்டமாக தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது.

Also read: இந்திய சினிமாவில் அதிக அவார்டுகளை குவித்த ஜாம்பவான்.. கமல் போல் அவார்டுகள் வேண்டாம் என அறிவித்த ஹீரோ

அதில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து சிம்புவுடன் இணையும் படத்திற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது. தேசிங்கு பெரியசாமி இயக்கும் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் கமல் உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் எடுக்கவும் ஆலோசித்து வருகிறாராம்.

மேலும் அவர் மிகத் தீவிரமாக தயாரிப்பு பணியில் இறங்கியதற்கு பின்னால் அவருக்கு நம்பிக்கையான ஒரு மனிதர் இருக்கிறாராம். இந்த தயாரிப்பு நிறுவனத்தை ஹாசன் சகோதரர்கள் அதாவது கமல் தன் அண்ணன்களுடன் இணைந்து தான் ஆரம்பித்தார். ஆனால் தற்போது அதன் பொறுப்பு முழுவதையும் கமல் தான் கவனித்துக் கொள்கிறார்.

Also read: நேரம் சரியில்லாத 3 பேரை தூக்கிவிடும் கமல்.. விக்னேஷ் சிவனுக்காக உலகநாயகன் எடுக்கும் ரிஸ்க்

ஏனென்றால் அவருடைய மூத்த அண்ணன் சாருஹாசன் தற்போது வயது மூப்பின் காரணமாக ஓய்வில் இருக்கிறார். அதேபோன்று அவருடைய மற்றொரு அண்ணன் சந்திரகாசனும் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தற்போது கமல் அந்த இடத்திற்கு தனக்கு மிகவும் நம்பிக்கையான நபராக இருக்கும் மகேந்திரனை நியமித்துள்ளார்.

தற்போது இவர் தான் ராஜ்கமல் நிறுவனத்தின் பொறுப்புகளை கவனித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் உலகநாயகனுக்கு வலது கரமாகவும் இருக்கிறார். அதனால் இவர் எடுக்கும் முடிவுகளை கமலும் அங்கீகரித்து வருகிறார். மேலும் மகேந்திரன் தான் சிம்புவை வைத்து படம் இயக்க வேண்டும் என்றும் கூறினாராம். இது தவிர இன்னும் சில முன்னணி நடிகர்களிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அண்ணனுக்கு அடுத்தபடியாக கமல் நம்பும் ஒருவராக இவர் மாறி இருக்கிறார்.

Also read: புதுசா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த 5 கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்கள்.. ரீ என்ட்ரியில் பிச்சு உதறும் கமல் நண்பர் 

- Advertisement -

Trending News