திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

உலக நாயகன் தூசி தட்டிய பிரம்மாண்ட கனவு படம்.. தயாரிப்பாளரையும், ஹீரோவையும் துண்டு போட்ட கமல்

கமல் முன்பு இல்லாதது போல சுறுசுறுப்புடன் சினிமாவில் ரொம்ப பிசியாக இருக்கும் நடிகராக மாறிவிட்டார். அனைத்து மொழிகளிலும் தற்பொழுது நடித்து வருகிறார். முக்கியமாக தமிழில் அடுத்தடுத்து படம் ஆரம்பிக்காமலேயே படத்தை புக் செய்து வருகிறார். ஆனால் அடுத்த படம் இப்பொழுது ஆரம்பிப்பார்கள் என்று தெரியவில்லை அடுத்து படமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கமல் அரசியலிலும் அவ்வப்போது காய் நகர்த்தி வருகிறார் முன்பு என்ன தவறு செய்தோம் என்பதை திருத்தி அரசியல்வாதிகளின் வழியிலேயே சென்று தனக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொள்கிறார் என்று நன்றாக தெரிகிறது. அதற்கு தற்பொழுது திமுகவில் கூட்டணி என்ற அறிவிக்காமல் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் தன் ஆசையை சினிமாவில் வேக வேகமாக நிறைவேற்றி வருகிறார். அதேபோல் பணத்தையும் சேர்த்து வருகிறார். எந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் கமல் ஒதுக்கி வைத்தார்கள் அதற்கான பாடத்தை தற்போது காட்டுகிறார் எல்லா பணத்தை சம்பாதித்தும் அதை புத்திசாலியாக மற்ற ஹீரோக்களை வைத்தும் தயாரித்து வருகிறார்.

இப்படி இருக்க திடீரென கமல் தனது கடைசிப் பட அறிவிப்பை தனது நண்பருடன் பேசி உள்ளார். அதை வேறு ஒன்றும் இல்லை தனது கனவு படமாக மருதநாயகம் படம் தான். அது அப்பொழுதே 1000 கோடி பட்ஜெட்டில் உருவானது. பண வசதி செய்ய முடியாததால் தற்பொழுது வரை அது கனவு படமாக இருந்து வருகிறது. அதை தற்போது தூசி தட்ட இருக்கிறார் கமல்.

இப்போது உள்ள காலகட்டத்தில் இந்த படத்திற்கு ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் தேவை இல்லை நமது தயாரிப்பாளர்களை போதும் என்று லைக்காவிடம் பேசி உள்ளார். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டனர். இவர் அனைத்து படங்களையும் முடித்துவிட்டு அந்த படத்தில் ஈடுபடலாம் என்று தெரிகிறது. இதில் இவர் நடிப்பாரா இல்லை சூர்யாவை நடிக்க வைத்து விட்டு இயக்கம் மட்டும் பார்த்துக் கொள்வாரா என்று தெரியவில்லை.

இந்த படத்தை முடித்துவிட்டு கடைசி படமாக அறிவிக்கலாம் அதற்குள் மூன்று வருட மற்ற படங்களை முடிக்க வேண்டும் அதற்குள் அரசியலையும் ஒரு முக்கிய இடத்திற்கு வந்து விட வேண்டும். அரசியல் காரணமாகத்தான் கமல் இந்த வேலையை செய்து வருகிறார் என்று நன்றாக தெரிகிறது. கடைசி முறை இதே மாதிரி அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் நடிக்க வந்தார் ஆனால் இந்த முறை தெளிவாக வெற்றி பெறுவார் என்று நன்றாக தெரிகிறது.

- Advertisement -

Trending News