வெள்ளந்தியாக இருந்த ரஜினி, சூறையாடிய தயாரிப்பாளர்கள்.. ஒரு கோடி சம்பளம் வாங்க காரணமாக இருந்த கமல்

Rajini-Kamal: இப்போது ரஜினியின் சம்பளத்தை கேட்டால் தலையை சுற்ற வைக்கிறது. அதாவது தலைவர் 170 படத்திற்கு கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக ரஜினிக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதேபோல் விஜய்யின் சம்பளமும் 200 கோடியை தாண்டி விட்டது. இந்நிலையில் கமல், ரஜினி இருவருமே ஒரு காலத்தில் போட்டி நடிகர்களாக இருந்தனர்.

ஆனால் குழந்தை நட்சத்திரமாகவே கமல் சினிமாவில் அறிமுகமானதால் அவருக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 16 வயதினிலே படத்தில் சப்பானியாக நடித்த கமல் 20000 சம்பளம் வாங்கிய நிலையில் பரட்டையாக நடித்த ரஜினிக்கு 3000 மட்டும் தான் சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள நிறைய படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை ரஜினி பெற்றார். இந்த சூழலில் ரஜினியின் படங்கள் நல்ல வசூலை குவித்தாலும் அவரின் சம்பளம் என்பது குறைவாகத்தான் இருந்தது. அதைப்பற்றி ரஜினியும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார்.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தயாரிப்பாளர்கள் ரஜினியை வைத்து கொண்டு நல்ல லாபத்தை பார்த்தனர். தனது பெயரை வைத்து தயாரிப்பாளர்கள் சூறையாடுகிறார்கள் என்பது கூட தெரியாமல் வெள்ளந்தியாக இருந்திருக்கிறார் ரஜினி. அப்போதுதான் கமல் ரஜினிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

அதாவது உன்னுடைய மார்க்கெட் தெரியாமல் இருக்கிறாய், மேலும் உன் மூலம் தயாரிப்பாளர்கள் நிறைய லாபம் பார்த்து வருகிறார்கள். ஆண்டவரின் அட்வைஸை கேட்ட ரஜினி தடாலடியாக முடிவெடுத்தார். அதன்படி தன்னுடைய அடுத்த படத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கினார். அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து தான் இன்று 200 கோடி சம்பளம் வாங்குகிறார்.

இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது கமல் தான். தன்னுடைய போட்டி நடிகராக இருந்தாலும் எந்த பாரபட்சமும் பார்க்காமல் ரஜினிக்கு உதவி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தற்போது வரை கமல், ரஜினி இருவருமே நட்பு பாராட்டி வருகிறார்கள். மீண்டும் இவர்கள் இருவரும் எப்போது ஒன்றாக நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்