வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரஜினி போல் பிழைக்கத் தெரியாத கமல்.. நல்லது செஞ்சும் வாங்கும் கெட்ட பெயர்

எப்போதுமே புகழ் வெளிச்சத்தில் மின்னி கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ஆன்மீக ரீதியாக நல்லது மட்டுமே செய்வார். அப்படி அவர் தன்னை நம்பியவர்களுக்காக ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் ஏதாவது ஒரு விஷயம் கேள்விப்பட்டால் முதல் ஆளாக ஓடி வந்து நிற்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதனாலேயே அவர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால் கமல் இதுபோன்று இருப்பது கிடையாது என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே இருந்து வருகிறது. மேலும் அவர் யாருக்கும் ஒரு ரூபாய் கூட உதவி செய்ய மாட்டார். கஷ்டப்படுபவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூற மாட்டார் என்பது போன்ற கடும் விமர்சனங்கள் அவர் மேல் இருக்கிறது.

Also read: லியோ படத்தை விட ரஜினிக்காக மெனக்கெடும் லோகேஷ் .. விக்ரமை விட வெறித்தனமாக தயாராகும் ஸ்கிரிப்ட்

சமீபத்தில் கூட நடிகர் மயில்சாமியின் இறப்புக்கு ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய போது கமல் மட்டும் வரவில்லை என்று பல விவாதங்கள் எழுந்தது. ஆனால் உண்மையில் கமல் பிறருக்கு செய்யும் உதவிகளை யாரிடமும் வெளி காட்டிக் கொண்டது கிடையாது. சினிமா மட்டுமல்ல அந்தத் துறையில் இல்லாதவர்களுக்கு கூட இவர் உதவி இருக்கிறார். ஆனால் இது எதுவும் மீடியாவில் வந்தது கிடையாது.

ஏனென்றால் இது போன்ற விளம்பரங்களை அவர் விரும்புவதில்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் விஷயத்தில் அப்படி கிடையாது. அவர் எங்கு சென்றாலும் அது ஒரு பப்ளிசிட்டியாக மாறிவிடும். மேலும் அவர் செய்யும் உதவிகள் அனைத்தும் பிஆர்ஓ மூலம் மீடியாவில் விளம்பரப்படுத்தப்படும். அப்படித்தான் நடிகர் பொன்னம்பலம் கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தபோது கமல் முதல் ஆளாக ஓடி வந்து உதவி செய்தார்.

Also read: ரஜினி மாஸ் படத்திற்கு ரீமேக் செய்ய வாய்ப்பே இல்ல.. கிடுக்கு புடி போட்ட தயாரிப்பாளர்

அதே போன்று ரஜினியும் அவருக்கான மருத்துவ உதவியை செய்தார். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் பொன்னம்பலம் உடல்நலம் தேறி வரும் வரையில் அவருக்கான செலவு மற்றும் குடும்ப செலவு அனைத்திற்கும் கமல் தான் உதவி செய்தாராம். மேலும் அவருடைய பிள்ளைகளின் படிப்பிற்கான செலவை கூட ஏற்றுக் கொண்டாராம். இந்த விஷயம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

இது போன்று பலருக்கும் அவர் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார். இருப்பினும் அதை அவர் விளம்பரப்படுத்தியது கிடையாது. இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இப்படி நல்லது செய்தும் அவர் கெட்ட பெயர் மட்டுமே வாங்குகிறார். இதை பார்க்கும் போது ரஜினி போல் கமல் பிழைக்க தெரியாத மனிதராக இருக்கிறாரே என்ற எண்ணம் தான் தோன்றுகிறது.

Also read: கடைசியில் சிக்கிய ஆடு.. சிவகார்த்திகேயனை தொடர்ந்து கமல் பிரியாணி போடப் போகும் ஹீரோ

- Advertisement -

Trending News