7 மொழிகளில் சரளமாக பேசும் உலக நாயகனுக்கு அந்த ஒரு பாஷை மட்டும் சரியா வரல.. பதிலாக டப்பிங் பேசும் ஒரே நடிகர்

Kamal: சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போட வேண்டும் என்ற நோக்கத்தில் 4 வயதிலிருந்து 68 வயதான தற்போது வரை திரை உலகிற்கு தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் தான் உலக நாயகன் கமலஹாசன்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் இளம் ஹீரோக்களை வைத்து தற்போது படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். உலகநாயகன் என்ற பெயருக்கு ஏற்ப நடிப்பில் பிச்சு உதறிக் கொண்டிருக்கும் கமல், ஏழு மொழிகளில் சரளமாக பேசக்கூடிய திறமை கொண்டவர். இவர் நடிக்கும் படங்களில் அவரே டப்பிங் பேசி அசத்துபவர்.

Also Read: இசையை தாண்டி தயாரிப்பிலும் கல்லா கட்டிய இளையராஜாவின் 6 படங்கள்.. சூப்பர் ஹிட் அடித்த சிங்காரவேலன்

ஆனால் அவருக்கு ஒரே ஒரு மொழியில் மட்டும் தடுமாற்றம் ஏற்படும். அதில் மட்டும் அவரால் சரளமாக பேச முடியவில்லை. பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு இரண்டு அல்லது மூன்று மொழிகள் தெரிந்திருக்கும்.

ஆனால் கமலுக்கு மட்டும் தமிழ், ஹிந்தி ,மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் பேசத் தெரியும். இந்த மொழிகளில் எல்லாம் அவர் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகி வெள்ளி விழாக்களும் கொண்டாடி இருக்கிறது. இந்திய நடிகர்களில் யார் படமும் இப்படி ஏழு மொழிகளில் வெற்றி பெற்றது இல்லை.

Also Read: கமல் சொல்வதை கொஞ்சம் கூட மதிக்காத ஷங்கர்.. இந்தியன் 2 மீண்டும் துளிர் விட்ட சண்டை

அந்த வகையில் கமலின் சாதனை இதுவரை எந்த நடிகராலும் முறியடிக்க முடியாத தேசிய சாதனை ஆக பார்க்கப்படுகிறது. அவர் அக்கட தேசத்து மொழியான தெலுங்கில் மட்டும் தடுமாற்றம் இருப்பதால், அவருக்கு பதில் நடிகரும் பிரபல பின்னணி பாடகருமான எஸ்பி பாலசுப்ரமணியம் டப்பிங் கொடுத்துள்ளார்.

ஆனால் எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைந்த பிறகு வேறு யாரையும் தெலுங்கில் கமலுக்கு பதில் டப்பிங் கொடுக்க விடாமல், அந்தக் குறையையும் தீர்க்க வேண்டும் என இப்போது அவரே சொந்த குரலில் டப்பிங் கொடுக்கிறார்.

Also Read: உலக நாயகனை உப்புக்குச் சப்பாணியாக பயன்படுத்திய லோகேஷ்.. இது தெரியாமல் பூரித்துப் போன விஜய்

- Advertisement -