வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விக்ரம் ரிலீசுக்கு முன்பே அஜித் பட இயக்குனரை லாக் செய்த ஆண்டவர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கூட்டணி

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியடைந்ததை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அதன் முதற்கட்டமாக அவர் இப்போது ஒரு அரசியல் கதையை தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த படத்தில் தான் அவர் அடுத்ததாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் இந்த திரைப்படத்தை அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான எச் வினோத் இயக்க இருக்கிறார். வினோத் எப்படி கமலின் திரைப்படத்தை இயக்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதுதான் தற்போது திரையுலகின் ஹாட் டாபிக்காக இருக்கிறது.

ஆனால் இதற்குப் பின்னணியில் லோகேஷ் கனகராஜ் தான் காரணமாக இருக்கிறாராம். எப்படி என்றால் லோகேஷ் மற்றும் வினோத் இருவரும் நீண்ட காலமாகவே நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அதனால்தான் லோகேஷ், வினோத் தயார் செய்து வைத்திருந்த பரபரப்பான அரசியல் சம்பந்தப்பட்ட கதையை கமலின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

கதையைக் கேட்ட கமலுக்கும் மிகவும் பிடித்துப் போனதால் இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் சம்மதித்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் விக்ரம் திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டு விட்டதாம். இப்படித்தான் வினோத் கமலின் விருப்ப பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தற்போது கமலுக்கு எல்லாமுமாக இருக்கும் மகேந்திரனுக்கும் இந்த கதை ரொம்பவே பிடித்து விட்டதாம். அதனால் அவர் தான் கமலை இந்த படத்தில் நடிக்க சொல்லி வற்புறுத்தி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மொத்த ஸ்கிரிப்ட் புக்கையும் அலசி ஆராய்ந்த ஆண்டவர் இதற்கு ஓகே சொல்லி இருக்கிறார்.

வினோத் தற்போது அஜித்தை வைத்து ஏ கே 61 திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் வேலைகளை முடித்துவிட்டு அவர் கமலுடன் கைகோர்க்க இருக்கிறார். அந்த வகையில் கமல் மற்றும் வினோத் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

- Advertisement -

Trending News