முருகதாசக்கு குடைச்சல் கொடுக்கும் கமல்.. இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் கடவுள் நடிகர்

Kamal creating problem with Murugadoss depending upon hero’s call sheet: தமிழ் சினிமாவில் தளபதிக்கு அடுத்தபடியாக குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். 

ஆரம்பத்தில் காமெடியை மட்டுமே தன்னுடைய பிளஸ் ஆக்கி சிறுசு முதல் பெருசு வரை  அனைவரையும் தன் காமெடியால் வசப்படுத்தியவர், இன்று ஆக்சன், பயோபிக்கென அடுத்த லெவலுக்கு சென்று விட்டார்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில்  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மறைந்த முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் தான் சிவகார்த்திகேயனின் அமரன்.

படம் ரிலீஸ் ஆகும் முன்பே சர்ச்சையை கிளப்பி பல மடங்கு வியாபாரத்துடன் கொடி கட்டி பறந்து வருகிறது. பல்வேறு சூழ்நிலை காரணங்களால் படப்பிடிப்பு அதிக இடைவேளை எடுத்து பொறுமையாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்தது. 

இதனால் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் உடன் கைகோர்த்து தனது அடுத்த படமான SK23 இல் இணைந்தார். படப்பிடிப்பிற்கான பூஜை போடப்பட்டதிலிருந்து விறுவிறுவென தயாராகி வருகிறது  SK23.

காமெடி சாயல் சிறிதும் இல்லாமல் முழுக்க முழுக்க  ஆக்சன் காட்சிகளுடன் SK23

சிவகார்த்திகேயனை இதுவரை பார்த்திராத வண்ணம் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்துடன் விஜய்யின் துப்பாக்கி ரேஞ்சுக்கு அதிரடியான ஆக்சன் காட்சிகளை  அமைத்து உள்ளார் முருகதாஸ்.

இது தவிர சிவகார்த்திகேயனுக்கென பயிற்சியாளரை நியமித்து அவர் சொல்லும் வண்ணமே நடிக்கவும் கட்டளையிட்டுள்ளாராம் இயக்குனர்.

ஏற்கனவே அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் செய்தியை குறித்து விட்டு அதற்குள் படப்பிடிப்பை முடிக்க உத்தரவிட்டுள்ளாராம் கமல்

இன்னும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயனின் கால்சீட் 20 நாட்கள் மீதம் இருக்கவே  அமரன் படத்திற்கு கால் சீட் வேணும்னு கேட்கிறார் கமல்.

ராஜ்கமல் புரொடக்ஷனில் எஸ் கே நடித்த அமரன் படம் இன்னும் முடியவில்லை அதற்குள் முருகதாஸ் படத்திற்கு வந்துட்டாரு!இப்பொழுது உலகநாயகன் விடாப்பிடியாக அமரன் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு போய்க் கொள்ளவும் என்று கூற, 

சிவகார்த்திகேயனின் படத்தை முடித்துவிட்டு அவருக்காக பாலிவுட்டில் காத்திருக்கும் சல்மான் கான் படத்தை இயக்க போவதாக இருந்தார் முருகதாஸ். 

கமலின் இந்த முடிவால் உச்சகட்ட கடுப்பில் உள்ளார் இயக்குனர் முருகதாஸ். இவை எதற்குமே சம்பந்தமில்லாதவாறு சிவகார்த்திகேயன் மௌனம் காத்து வருவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்