இந்த வாரம் பிக் பாஸுக்கு வருகிறாரா கமல்.? கெஞ்சி கூப்பிடும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடர்ந்து 5 சீசன்களையும் தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமலஹாசன் கொரோனா பாதிப்பினால் கடந்த நவம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனவே மிதமான கொரோனா தொற்றின் காரணமாக கமலஹாசனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையினால் தற்போது முழுமையாக குணம் அடைந்து உள்ளார். இருப்பினும் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதன் பிறகு வழக்கம் போல் அவருடைய பணியை தொடரலாம் என்று கமல்ஹாசன் சிகிச்சை பெற்றுக் கொண்ட மருத்துவமனை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் பிக் பாஸ்  சீசன்5 நிகழ்ச்சியை கடந்த வாரம் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்க முடியாத நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

ஆனால் கமலஹாசன் மட்டுமே அந்த வேலையை திறன்பட செய்து செய்ய முடியும் வேறு எவரும் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்பது ரசிகர்களின் ஆணித்தரமான கருத்தாகும். தற்போது கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த கமலஹாசன் வரும் வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இந்த தகவல் பிக்பாஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வாரம் மட்டும் வீடியோ கான்பரசிங் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர விக்ரம் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே ரம்யாகிருஷ்ணன் தலைமை தாங்கி நடத்தி வரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தயவுசெய்து கமலஹாசன் வரவேண்டும் என்று செஞ்சி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்