இந்தியன் 2 வில்லனை தேர்ந்தெடுத்த கமல்.. தொடரும் விக்ரம் கூட்டணி

ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ஒரு சில பிரச்சனையால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் கமலஹாசனுக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதில் விஜய் சேதுபதி கமலஹாசனுக்கு வில்லனாக நடிக்க உள்ளார். இதனால் படத்தின் பரபரப்பு தொடங்கிவிட்டது. இது கமலே எடுத்த முடிவு என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியன் 2 படத்தின் இயக்குனரான ஷங்கரிடம், ‘வில்லன்களில் உங்களது தேர்வு யாராக இருக்கும்’ என்ற கேள்விக்கு ஷங்கரும் விஜய் சேதுபதி தான் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

விஜய் சேதுபதி நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். பேட்ட படத்தில் ரஜினிக்கு எதிராக வில்லன் வேடத்தில் நடித்தார். அடுத்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து பல மொழிகளில் வில்லன் கதாபாத்திரம் நடித்து வந்தார்.

விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி யாரும் எதிர்பார்க்காத நடிப்பை வெளிக் காட்டினார். படம் வெற்றியும் பெற்றது. இதனால் கமல், விஜய் சேதுபதி கூட்டணி படத்திற்கு முக்கியமாக அமைந்தது. இதன்பிறகு அடுத்த கமல் படத்தில் விஜய் சேதுபதி எப்போது நடிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தை தொடங்குவதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஏற்கனவே படத்தின் 30  சதவீத படப்பிடிப்பு படமாக்கப்பட்ட நிலையில், மீதமிருக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட உள்ளது. அதற்கேற்றார் போல் தற்போது விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமலஹாசனும் விஜய் சேதுபதியுடன் அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடிக்க விரும்புகிறார். மேலும் கமலஹாசன் அடுத்து நடிக்கும் படம் தேவர் மகன் 2.

அதிலும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க கமல் ஆர்வமாக உள்ளார். கமலின் பிடித்த நடிகராக விஜய் சேதுபதி மாறியுள்ளார். அதுவும் கமலுக்கு வில்லனாக. இதனால் இனிமேல் கமல் நடிக்கும் படங்களில் விஜய் சேதுபதியை அதிகம் காணலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்