5 படங்களில் கெஸ்ட் ரோலில் வந்து கைத்தட்டல்களை வாங்கிய கமல்.. தலைவருக்காக லாயரா வாதாடிய உலக நாயகன்

Actor Kamal Guest Role Movie: தற்போது பெரிய நடிகர்களாக இருப்பவர்கள் மற்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒரு சப்போர்ட்டாக கெஸ்ட் ரோலில் வந்து நடித்துக் கொடுப்பது ஃபேஷன் ஆகிவிட்டது. இதை அப்பொழுதே கமல் செய்து இருக்கிறார். இவர் கெஸ்ட் ரோலில் வந்து நடித்து அதிக கைத்தட்டல்களை வாங்கி இருக்கிறார். அப்படி இவர் நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

மகளிர் மட்டும்: சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு மகளிர் மட்டும் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரேவதி, ஊர்வசி, ரோகினி, நாசர், நாகேஷ் மற்றும் கமல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பெண்கள் வேலை செய்யும் போது அவர்களுக்கு வரும் இடையூறுகளை தவிர்க்கவும், தேவையான வசதிகளை செய்து கொடுத்து ஒரு நல்ல முதலாளி என்று நிரூபிக்கும் வகையில் கெஸ்ட் ரோலில் கமல் வந்து அவருடைய அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also read: கமல் என்சைக்ளோபீடியானு சும்மா சொல்லல.. அவர் தொடாத இடமே இல்ல, ஆல்ரவுண்டராக இருக்க முக்கியமான 9 காரணங்கள்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு: சந்தன பாரதி இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு கடமை கண்ணியம் கட்டுப்பாடு திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், கீதா, நாசர் மற்றும் கமல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கமல் கெஸ்ட் ரோலில் வந்து சத்யராஜ் காக வந்து நடித்துக் கொடுத்திருப்பார்.

தில்லு முல்லு: கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு தில்லு முல்லு திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சௌகார் ஜானகி மற்றும் கமலஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி செய்த தில்லு முல்லு வேலையை அவர் பக்கம் நியாயமாக இருக்கும் படி லாயராக வந்து வாதாடி அனைவரையும் நடிப்பால் வியப்பில் ஆழ்த்திருப்பார்.

Also read: அச்சு அசல் நிஜ குடிகாரங்களாகவே வாழ்ந்த இரண்டே நடிகர்கள்.. ரஜினிகாந்த், கமலுக்கு நெருங்கிய கூட்டாளி

நள தமயந்தி: இயக்குனர் மௌலி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு நள தமயந்தி திரைப்படம் வெளிவந்தது. இதில் மாதவன், கீது மோகன்தாஸ், ஸ்ருதிகா, ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கமல் கெஸ்ட் ரோலில் வந்து நடித்திருப்பார். கிளைமேக்ஸ் காட்சியில் உணவகத்தை திறக்கும் நிகழ்ச்சிக்கு கமல் மற்றும் ஜெயராம் வந்து திறந்து வைப்பார்கள்.

பார்த்தாலே பரவசம்: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு பார்த்தாலே பரவசம் திரைப்படம் வெளிவந்தது. இதில் மாதவன், சிம்ரன், ராகவா லாரன்ஸ், சினேகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கமல்ஹாசன் விருந்தினர் தோற்றத்திற்கு வந்திருப்பார். இதில் மிஸ் சென்னை கான்டஸ்ட்க்கு கெஸ்ட் ஆக வந்திருப்பார். அதே நேரத்தில் அனைவரது கைத்தட்டல்களையும் வாங்கும்படி காமெடியனாகவும் நடித்திருப்பார்.

Also read: மயில்சாமியை பார்க்க வராத இளம் நடிகர்கள்.. அதிலும் கமல்ஹாசன் இப்படி இருப்பது மிகவும் வருத்தமானது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்