நம்ப வச்சு கழுத்தறுத்த கமல்.. இலவு காத்த கிளியாய் வாடி கிடைக்கும் சூப்பர் ஹிட் இயக்குனர்

எச் வினோத் துணிவு படத்திற்கு பிறகு ஒரு வருடமாகவே படம் ஏதும் பண்ணாமல் இருந்து வருகிறார். இதன் காரணமாகவே ஒவ்வொரு படங்களுக்கும் அதிக இடைவெளி ஏற்பட்டுவிட்டது.  பல வருடங்களாக அஜித்துக்கு தொடர்ந்து படங்கள் செய்ததால் அவர் கவனம் வேறு எந்த ஹீரோவிடமும் செல்லவே இல்லை.

திடீரென அஜித்தை விட்டு வெளியே வந்தது அவருக்கு அடுத்த நிலை அடைய சில மாதங்கள் தேவைப்பட்டது. தனுசை வைத்து பண்ணலாம் என்று அவரிடம் ஒரு கதை சொன்னார். அடுத்து குறுகிய காலத்தில் யோகி பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என்று ஆசைப்பட்டார். இப்படி அடுத்தடுத்து படம் வேகமாக பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தார்.

இந்த நேரத்தில் கமல் வினோத்தை அழைத்து கதை கேட்க , அந்த கதை கமலுக்கு பிடித்து விட்டது. கமல் பொதுவாகவே தற்போது உள்ள காலகட்டத்தில் எந்த முக்கியமான டைரக்டர்களையும் விட்டு விடமாட்டார் அவரை வைத்து தனக்கு ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த வரிசையில் எச். வினோத்தையும் தேர்ந்தெடுத்து விட்டார்.

அந்த அளவிற்கு வினோத் சொன்ன கதை பிடித்துப் போக அதை வேறு ஒரு ஹீரோவிடம் சொல்லிவிட போகிறார் என்ற அச்சமும் கமலிடம் இருந்து வந்தது. அதற்கு தகுந்தார் போல் கமல் துப்பாக்கி சுடும் ஒரு வீடியோவை வெளியிட்ட வினோத் அதுதான் தன் படம் என அறிவித்தார், அதை பார்த்து மிரண்டு விட்டனர் பழைய இயக்குனர்கள். இப்படியே ஒவ்வொரு மாதங்களும் கடந்து ஓடிவிட்டன.

எப்படியோ நவம்பர் 7ஆம் தேதி கமல் பிறந்தநாள் அன்று எச் வினோத் படத்தை ஆரம்பிக்கலாம் என்று சில தகவல்கள் வந்தன. அன்றே மணிரத்தினம் படத்தில் பிரமோவும் வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஒரே நாளில் இரண்டு விஷயங்கள் வருவதால் மகிழ்ச்சியாக இருந்து வந்தனர்.

ஆனால் தற்பொழுது மணிரத்தினம் படத்தின் புரோமோ வந்த அன்றே மணிரத்தினத்தின் பட சூட்டிங் தொடங்குகிறது. அப்போ வினோத்தின் கதி என்னவென்றே தெரியவில்லை இவரை நம்பி ஒரு வருடத்தை வீணாக்கி விட்டார். அஜித்தும் இதே மாதிரி தான் இருந்தார் இப்பொழுது தான் அவருக்கே படம் அமைந்துள்ளது. வினோத்திற்க்கு இன்னும் அமையவில்லை. எதற்காக கமல் வினோத்தை ஏமாற்ற வேண்டும் என்ற கேள்வியும் வருகிறது