அக்கடதேச நடிகருக்கு வில்லனாக மாறும் கமல்.. மொத்த பட்ஜெட்டில் பாதியை சுருட்டிய உலகநாயகன்

நான்கு வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் பலரையும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருப்பவர் தான் உலகநாயகன் கமலஹாசன். இவருடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது வெரைட்டி காட்ட வேண்டும் என தன்னையே வருத்திக் கொள்பவர்.

இப்போது உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இந்த படத்தை முடித்துவிட்டு அக்கட தேசத்தில் நடிகரின் படத்தில் வில்லனாக முதன்முதலாக களமிறங்க போகிறார். முன்பு ஹீரோவாக இருப்பது தான் மாஸ் என்ற பிம்பம் இருந்தது.

Also Read: நட்பை கூட பார்க்காமல் ரஜினிக்கு, கமல் கொடுக்கும் நெருக்கடி..லோகேஷை வைத்து போடும் ஆடு புலி ஆட்டம்

ஆனால் இப்போது ஹீரோக்களும் வில்லனாக ரவுண்ட் கட்டிக் கொண்டிருக்கின்றனர். மேலும் அதற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுப்பதால் முதலில் தமிழில் இல்லாமல் தெலுங்கில் வில்லனாக கமல் என்ட்ரி கொடுக்கப் போகிறார். அதற்கு கமல் படத்தின் பாதி பட்ஜெட்டை சுருட்டியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ‘ப்ராஜெக்ட் கே’ என்ற படத்தில் அவருக்கு வில்லனாக கமலஹாசன் நடிக்கப் போகிறார். இதற்காக கமல் 20 நாள் கால் சீட் கொடுத்து இருக்கிறாராம்.  இந்த 20 நாளைக்கு மட்டும் அவர் 150 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.

Also Read: ஓவர் கெடுபிடி காட்டும் கமல்.. மணிரத்தினமே இருந்தாலும் உலகநாயகன் கொடுக்கும் டார்ச்சர்

இதற்கு தயாரிப்பு நிறுவனமும் ஒத்துக்கொண்டுள்ளது. தற்போது இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு, பிக் பாஸ் சீசன் 7-ஐ தொகுத்து வழங்கப் போகிறார். அதன் பிறகு ப்ராஜெக்ட் கே படத்தில் முரட்டு வில்லனாக தயாராக திட்டமிட்டு இருக்கிறார்.

இதில் பிரபாஸ், கமல் மட்டுமல்ல அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து பான் இந்தியா படமாக தயாராக போகிறது. இவர்களுடன் சூர்யா, திஷா பதானி, மகேஷ்பாபு ஆகியோரின் பெயரும் அடிபடுகிறது. சீக்கிரம் இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பல கோடிகளுக்கு மயங்கிய உலகநாயகன்.. முதன்முதலாக மற்ற ஹீரோக்களுக்காக எடுக்க போகும் அவதாரம்

- Advertisement -