வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அரசியலும் வேண்டாம் சினிமாவும் வேண்டாம் என கிளம்பிய கமல்.. ஆண்டவர் போடும் ஸ்கெட்ச்  

கமல் தக்லைப் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த  படம் கிட்டத்தட்ட 90% முடிந்துவிட்டது. அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட மணிரத்தினம் திட்டமிட்டு வருகிறார். இதனிடையே கமல் இந்த படத்தை முடித்த பின்னர் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

 கமல் அமெரிக்காவில் ஆறு மாத காலம் செலவிட திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் அரசியல் சார்ந்த பணியும் எந்த ஒரு புதுப்படமும் வேண்டாம் என கிட்டத்தட்ட 200 நாட்கள் அங்கேயே தங்க முடிவெடுத்துவிட்டார். அங்கே ஏஐ தொழில்நுட்பத்தை கரைத்து குடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

 பொதுவாக கமல்  எந்த ஒரு புது டெக்னாலஜி வந்து விட்டாலும் அதை படத்தில் புகுத்தி விட வேண்டும் என ஆசைப்படுவார். அதைப்போல் தான் இப்பொழுது தமிழ் சினிமாவில் ஏ ஐ  டெக்னாலஜி ஆட்சி செய்து வருகிறது. இது கமலுக்கு ரொம்ப நாட்களாக உறுத்தலை உண்டாக்கி வருகிறது. 

இப்பொழுது நடித்து வரும் தக்லைப் படத்தில் கூட இந்த புது டெக்னாலஜியை பயன்படுத்தலாம் என மனிதத்தனத்திற்கு அறிவுரை கூறியிருக்கிறார். அமெரிக்கா சென்று ஏ ஐ தொழில்நுட்பத்தை படிப்பது சினிமாவிற்காக  மட்டும் இல்லை. அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்காக இந்த புது தொழில்நுட்பத்தில் நல்லது செய்வதற்காகவும் முன்னேற்பாடு செய்கிறார்.

இதற்கிடையே மருதநாயகம் படத்தின் வேலைக்காகவும் இந்த டெக்னாலஜியை கற்க உள்ளார். ஆயிரம் கோடிகள் பட்ஜெட் இல்லாமல் இந்த படம் பல ஆண்டுகளுக்கு முன்பே கமலால் தொடங்கப்பட்டு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த படத்திற்கான வேலைகளையும் இப்பொழுது கமல் கையில் எடுக்க உள்ளார்.

- Advertisement -

Trending News