கமல், ரஜினியை எல்லாம் ஓவர் டேக் செய்த ஷாருக்கான்.. மெய்சிலிர்க்க வைத்த கிங் ஆப் பாலிவுட்

Actor Shah Rukh Khan: தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக இருக்கக்கூடிய உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஓவர் டேக் செய்யும் வகையில் ஷாருக்கான் தரமான சம்பவம் செய்திருக்கிறார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ஜவான்.

வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தற்போது படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் சமீபத்தில் சென்னையில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஷாருக்கான் சுவாரசியமான பல நிகழ்வுகளை அரங்கேற்றி மெய்சிலிர்க்க வைத்தார்.

Also Read: ஷாருக்கானின் சில்மிஷத்தால் 4 வருடங்களாக இழுத்தடித்த ஜவான் படம்.. அட்லீயை வச்சு செய்த சூப்பர் ஸ்டார்

விஜய் சேதுபதியை கட்டிப்பிடித்தது, அனிருத்துக்கு முத்தம் கொடுத்தது, மேடையில் கலகலப்பாக உரையாடியது என அத்தனை விஷயங்களும் ரசிகர்களை அவருடன் கனெக்ட் செய்தது. அது மட்டுமல்ல கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாமல் ரசிகர்களுடன் ஆடியதையெல்லாம் பார்த்ததும் ரசிகர்களுக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது.

கிட்டத்தட்ட 57 வயதில் எனர்ஜி ஃபுல் மேன் என்றால் அது ஷாருக்கான் தான். கிங் ஆப் பாலிவுட் என்பது தான் இவரது பெயர். சூட்டிங் ஸ்பாட்டில் மனிதன் சுத்தி சுத்தி அடிக்கிறார். அவ்வளவு எனர்ஜியாக வேலை செய்கிறார்.

Also Read: ரத்தமும் சதையுமாக ஒட்டி வரும் விஜய், அட்லீ.. இவங்க அலப்பறை கொஞ்சம் ஓவராக தான் போகுது போல

தமிழ் மக்களை ரொம்பவும் கொண்டாடுகிறார். கூட சேர்ந்து நடனம் ஆடுவது, எளிதாக நடந்து கொள்வது போன்ற எல்லா குணத்துவமும் அவரிடம் இருக்கிறது. பாலிவுட்டில் இருந்து வந்திருந்தாலும் இப்படி நடந்து கொள்கிறார். ஆனால் கமல், ரஜினி ரசிகர்களை ஒரு தொலைவில் தான் வைத்திருக்கிறார்கள்.

ஷாருக்கானை பார்த்து நம்ம ஊரில் உள்ள பெரிய நட்சத்திரங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஹீரோக்களை கொண்டாடும் ரசிகர்களை அவர்களும் கொண்டாட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் இப்போது ஷாருக்கான் தான் மற்ற தமிழ் நடிகர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக இருக்கிறார்.

Also Read: புள்ள மேல கைய வைக்கிறதுக்கு முன்னாடி அப்பன தொடு பார்க்கலாம்.. தாறுமாறான மேக்கிங், ட்ரெண்டாகும் ஜவான் ட்ரைலர்

- Advertisement -