விட்ட 200 கோடியை இப்படித்தான் புடிக்கணும், வேற வழியில்ல.. ஆட்டத்தை ஆரம்பித்த ஆண்டவர்

கமலஹாசன் அடுத்த ஒரு வருடத்தில் குறைந்தது 100 முதல் 150 கோடியாவது சம்பாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடைய அடுத்த காயை நகர்த்தி வருவதாக அவருடைய வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன.

கமலஹாசனை பொறுத்தவரை பேசாமல் சினிமாவிலேயே நடித்துக் கொண்டிருந்திருக்கலாம். தேவையில்லாமல் கட்சி ஆரம்பித்து அதிலும் ஒரு இடம் கூட வெற்றி பெறாமல் மேற்கொண்டு கட்சியிலிருந்து சிலரும் விலகி பெரும் பஞ்சாயத்தை ஏற்படுத்திவிட்டது.

அது மட்டுமில்லாமல் தேர்தல் செலவுகளுக்காக இதுவரை 200 கோடி வரை செலவு செய்து விட்டாராம் கமல்ஹாசன். அவரை ஒரு மேடையில் எலக்சனுக்கு வந்தால் கண்டிப்பாக எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஆகும் என குறிப்பிட்டிருந்தார்.

அவர் சொன்னது போலவே நடந்துவிட்டது. இருந்தாலும் அந்த பணத்தை சம்பாதிக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை எனவும், அடுத்த ஒரு வருடத்தில் இதை இரட்டிப்பாக்கி காட்டுகிறேன் பார் என தன்னுடைய வட்டாரங்களில் சவால் விடுகிறாராம்.

அதற்கு தகுந்தாற்போல் தற்போது சொந்த தயாரிப்பில் விக்ரம் எனும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து பலகாலமாக பஞ்சாயத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்திலும் நடிக்க உள்ளாராம்.

இந்த இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து இழந்ததை மீட்டு விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம் உலகநாயகன் கமலஹாசன். அவரது அடுத்த ஆறுமாத டார்கெட் 200 கோடி என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.

kamal-cinemapettai
kamal-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்