GOAT படத்துக்கு கலாநிதி மாறன் கொடுக்கும் குடைச்சல்.. திருட்டு முழி முழிக்கும் ஏஜிஎஸ்

Kalanithi Maran has given trouble to Vijay starrer GOAT movie Audio rights: தமிழகத்தில் திரும்பியபக்கமெல்லாம் தளபதிமயம் தான். விஜய் அரசியலில் கால் எடுத்து வைத்த காலத்திலிருந்து, அவரின் ஒவ்வொரு நகர்வுகளையும் திரைபிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை கவனித்து வருகின்றனர். 

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் தளபதி, வெங்கட் பிரபுவின் கூட்டணியில் இணைந்துள்ள படமே “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” சுருக்கமாக GOAT.  

சமூக கருத்தை வலியுறுத்துவது, அரசின் திட்டங்களை விமர்சிப்பது என எந்த ஒரு வழக்கமான பாணியும் இல்லாமல் ஜாலியாக படம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் முற்றிலும் வேறுபட்ட கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்படும் திரைப்படமே GOAT. 

விஜய் உடன் முன்னணி நட்சத்திரங்கள் மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா,மோகன் என பலரும் இணைந்துள்ளனர். 

மார்ச் மாதத்தோடு படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் விறுவிறுவென நடந்து வருகிறது சூட்டிங். கிளைமாக்ஸ் காட்சியை திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டேடியத்தில் படமாக்க உள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ்க்கு செக் வைக்கும் சன் நெட்வொர்க்

யுவன் சங்கர் ராஜா இசையில் தளபதி விஜய் படத்தில் ஒரு பாடலை மட்டும் பாடியுள்ளார். மேலும் திரிஷா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளார் என்பது கூடுதல் தகவல். 

பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு, சமீபத்தில் வந்திருக்கும் பஞ்சாயத்து என்னவென்றால், படத்தின் ஆடியோ உரிமையை இதன் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ், 24 கோடிக்கு T Series நிறுவனத்திற்கு விற்று உள்ளது.  

விஜய் ஒரு பாட்டு தான் பாடியிருக்கிறார். அந்த பாட்டுக்கு தான் இத்தனை கோடி. சரி ஆடியோ உரிமையை விற்றாகிவிட்டது என்று இருக்கும் போது. படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய கலாநிதிமாறனின் சன் டிவி, படத்தின் பாடலை நாங்களும் சேனலில் வெளியிடுவோம் என்கிறது.

இந்த பாடல் படத்தில் தானே இடம் பெறுகிறது. படமும் பாடலும் எங்களுக்கும் சொந்தம் என்று மொத்தமாக ஏஜிஎஸ் தலையில் இடியை இறக்கியுள்ளது. 

இதை கேட்ட T Series நிறுவனமோ, சன் டிவிக்கு இந்த பாடலை ஒளிபரப்பும்  உரிமை கொடுத்தால், எங்கள் சேனலில் பார்வையாளர்கள் குறையும் அபாயம் தோன்றும். அதனால் நாங்கள் 15 கோடிதான் கொடுப்போம் என்று செக் வைக்கிறதாம். இருதலைக்கொல்லி எறும்பாய் விழி பிதுங்கி நிற்கிறது ஏஜிஎஸ்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்