மூணு பேரையும் முக்காடு போட்டு அமுக்கிய மாறன்.. அடுத்த கட்ட வசூலுக்கு விரித்திருக்கும் வலை

Kalanidhi Maaran: ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் எதிர்பார்க்காத வசூல் கலாநிதி மாறனை திக்கு முக்காட செய்து கொண்டிருக்கிறது. கவுண்டமணி காமெடியில் ஐயோ நான் இப்போது எதையாவது வாங்கியே ஆகணுமே என்று ஒரு வசனம் வரும் . அந்த நிலைமையில் தான் தற்போது கலாநிதி இருக்கிறார். சந்தோஷத்தில் அள்ளி கொடுத்து கொண்டு இருக்கிறார்.

ஒரு பக்கம் படத்தின் வெற்றி அத்திரி புத்திரி செய்து கொண்டிருக்க பங்குச்சந்தையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏகபோகமாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன் 550 என இருந்த சதவீதம் இப்போது 620 வரை சென்றிருக்கிறது. இதனால் இந்த நிறுவனம் தற்போது இரண்டு மடங்கு வரை பங்குச்சந்தையிலும் லாபம் பார்த்து வருகிறது.

Also Read:கமலை வைத்து ரஜினியை சுளுக்கு எடுக்கும் ப்ளூ சட்டை.. நாயகன் படத்தால் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட பீதி

இதனால் கலாநிதி மாறன் பயங்கர உற்சாகத்தில் காணப்படுகிறார். இது எல்லாமே ஜெயிலர் படத்தின் வியாபாரம் மற்றும் வசூல் வெற்றியால் தான் நடந்து இருக்கிறது. நினைத்த இடத்தை விட அதிக உயரத்திற்கு போய் விட்டோம் இனி அந்த இடத்தை விட்டு விடக் கூடாது என்பதில் ரொம்பவும் ஸ்ட்ராங்காக இருந்து அடுத்த கட்டத்திற்கான காயை நகர்த்தி வருகிறார்.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய தூண்களாக இருந்த ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத்தை பிளான் போட்டு தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விட்டார் கலாநிதி. சம்பளத்தை தாண்டி அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு, கோடிக்கணக்கில் பரிசுத்தொகை என இனி அவர்களே நினைத்தாலும் உங்களுக்கு படம் பண்ண முடியாது என்று சொல்லாத அளவிற்கு செய்துவிட்டார்.

Also Read:ஜெயிலர் வெற்றியால் காசை வாரி இறைக்கும் கலாநிதி.. கார், சம்பளத்தையும் தாண்டி கோடிக்கணக்கில் செக்

கலாநிதி மாறனின் அடுத்த திட்டம் முழுக்க தலைவர் 171 படத்தை வைத்து தான். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் மூலம் கமலுக்கு ஒரு பெரிய வியாபாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இப்போது லோகேஷ் மற்றும் ரஜினி சேர்ந்தால் ஜெயிலர், விக்ரம் படங்களின் வசூலை தாண்டும் அளவுக்கு படம் வெற்றி பெறும் என்பது கலாநிதி மாறனின் பெரிய நம்பிக்கையாக இருக்கிறது.

கலாநிதி மாறன் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் கூட்டணியில் படம் பண்ணவும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி கோடிக்கணக்கில் வெற்றியை பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இனி அதேதான் ஃபாலோ பண்ண வேண்டும் என நினைத்திருக்கிறது. இதனால் இந்த மூன்று பேரையும் வைத்து தான் பெரிய பெரிய திட்டங்களை போட்டு வருகிறது.

Also Read:ஊருக்கு தான் துறவி வேஷம் போடும் ரஜினி.. கலாநிதி மாறனால் அல்லோல்படும் லைக்கா

- Advertisement -