திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

என்னை ஒதுக்கி விடாதீர்கள்.. அந்த காரணத்தினால் கழட்டி விடப்பட்ட காஜல் அகர்வால்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்த காஜல் அகர்வால் தமிழில் பேரரசு இயக்கிய பழனி என்ற படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அதைத்தொடர்ந்து தளபதி விஜய், தல அஜித், சூர்யா, கார்த்தி, ஜீவா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.

சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகள் கூட திருமணம் ஆனபிறகு ஆள் அட்ரஸ் தெரியாமல் மறந்து போய்விடுவார்கள். அந்த நிலைதான் தற்போது காஜல் அகர்வாலுக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கௌதம் கிச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப்பின் நடிக்க வருவாரா என்றெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதையெல்லாம் கண்டுகொள்ளாத காஜல் அகர்வால் தனக்கு குடும்பம் தான் முக்கியம் என முடிவெடுத்து திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தினார். அதனால் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

பெரும்பாலும் சினிமாவில் இருக்கும் நடிகைகள் திருமணம் ஆனபிறகு மறுபடியும் நடிப்பது சிரமம். அந்த நிலைதான் தற்போது காஜல் அகர்வாலுக்கும் ஏற்பட்டிருக்கிறது. காஜல் அகர்வால் என்னை ஏன் படத்திலிருந்து ஒதுக்கி விடாதீர்கள் எனக் கூறிவருகிறாராம்.

காஜல் அகர்வால் ஏற்கனவே பாதி நடித்த படம் இந்தியன் 2. பல பிரச்சினைகளால் இந்த படம் பாதியில் நின்று போனது. இப்பொழுது இந்த படத்தை மீண்டும் எடுக்க திட்டம் போட்டு வருகின்றனர். காஜல் அகர்வால் குழந்தை பெற்றதால் அவரால் இதில் டைமுக்கு நடித்துக் கொடுக்க முடியுமா என படக்குழுவினர் யோசித்து அவரை கழட்டி விடும் முடிவில் இருக்கின்றனராம்.

இதைக் கேள்விப்பட்ட காஜல் அகர்வால், நான் சிட்டாக இருக்கிறேன் என்னை ஒதுக்கி விடாதீர்கள் என்று படக்குழுவினருக்கு தூது அனுப்பி இருக்கிறாராம். இருப்பினும் படக்குழு காஜல் அகர்வாலின் ஆர்வத்தைப் பார்த்து முடிவை மாற்றிக் கொள்ளலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

Trending News